ஹோம் /தஞ்சாவூர் /

பாமாயில் பண்ணை மூலம் வருடத்துக்கு ரூ.40 லட்சம் வரை லாபம்- கலக்கும் தஞ்சை விவசாயி

பாமாயில் பண்ணை மூலம் வருடத்துக்கு ரூ.40 லட்சம் வரை லாபம்- கலக்கும் தஞ்சை விவசாயி

பாமாயில்

பாமாயில் பண்ணை

Thanjavur | பாமாயில் பண்ணை மூலம் அரசு தரும் மானியங்களை பயன்படுத்தி வருடத்துக்கு 40 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்டி வருகிறார் தஞ்சை விவசாயி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் காத்தலிங்கம். அவர், முழு நேர விவசாயியாக உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாமாயில் பண்ணை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு தனது 20 ஏக்கர் நிலத்தில் அரசு தரும் மானியங்களை பயன்படுத்தி பாமாயில் பண்ணை வைத்து நல்ல லாபம் பார்த்து வருகிறார்.

இந்த பாமாயில் பண்ணை பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்களை காத்தலிங்கம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பாமாயில் பண்ணை:

பாமாயில் பண்ணை வைக்க அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. செடிகள், உரங்கள் இவை அனைத்தும் அரசே மானிய விலையில் ‌தருகிறது. பாமாயில் செடிகள் மரமாக 4 ஆண்டு காலம் ஆகும். இந்த 4 ஆண்டு இடைப்பட்ட காலத்தில் ஊடு பயிர்களை பயிர் செய்யலாம். இதில் செடிகள் பராமரிப்பிற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஹெக்டேருக்கு வருடம் 10,000-ரூபாய் அரசு தருகிறது.

பாமாயில் காய்

மேலும் 4 ஆண்டுகள் முடிந்த பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை சாகுபடி செய்யலாம். பாமாயில் பண்ணை குறைந்த பட்சமாக 5-6 ஏக்கர் நிலத்தில் செடிகளை வைக்கலாம்.‌

விவசாயி - காத்தலிங்கத்தை பொருத்தவரையில் 20 ஏக்கர் நிலத்தில் பண்ணை வைத்துள்ளார்கள். தற்போது இருக்கும் விலைப் படி வருடத்திற்கு 40 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.  10 நாட்களுக்கு ஒரு முறை சாகுபடி செய்து,50 ஆயிர ரூபாய் முதல்- முதல்-1.50 ரூபாய் வருமானம் பெறுகிறார். இது பாமாயில் மார்கெட் விலையை பொருத்து மாறுபடும். ஆனால் தற்போது இருக்கும் எண்ணைகளின் விலைவாசி உயர்வால் அதிக அளவில் லாபம் பெறலாம்.

பாமாயில் மரம்

பாமாயில் பண்ணையைப் பொருத்த வரையில் பெரிதளவில் பராமரிப்பு கிடையாது. ஒரு வகையான பூச்சி தொல்லை மட்டும் இருக்கும். அதற்கு மானிய விலையில் அரசே மருந்து தருகிறது. தென்னை பண்ணை போன்றுதான் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் விடலாம். பெரிதளவில் வேலை மெனக்கெடல்கள் இல்லை என்பதால் சிலர் பாமாயில் பண்ணை - விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாமாயில் காய்

மேலும் விவசாயி காத்தலிஙக்கம் கூறுகையில், ‘தென்னை பண்ணை வைப்பதை விட இதில் எனக்கு நல்லா லாபம் கிடைக்கிறது. மற்ற விவசாயம் செய்வதை காட்டிலும் இதில் கூலி ஆட்கள் தேவை பெரிதளவில் கிடையாது. ஊடு பயிர்களையும் பராமரித்து வருகிறேன். சாகுபடி செய்யப்பட்ட இந்த பாமாயில் பழங்களை எடை மேடையில் எடை வைத்து கோத்ரேஜ் நிறுவனத்திடம் விற்றுவிடுவேன். அதற்கான தொகை வங்கி கணக்கில் அனுப்புவார்கள். வருடத்திற்கு சராசரியாக 40 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதனால் எனக்கு தெரிந்த பலரிடம் பாமாயில் பண்ணை உருவாக்க வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur