ஹோம் /தஞ்சாவூர் /

படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை.. அப்பாவின் மூலிகை சூப் கடையில் உழைக்கும் கல்லூரி மாணவன்

படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை.. அப்பாவின் மூலிகை சூப் கடையில் உழைக்கும் கல்லூரி மாணவன்

தஞ்சை

தஞ்சை கல்லூரி மாணவர்

Thanjavur | தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் கல்லூரி படிப்பைப் படித்துக் கொண்டே அப்பாவுடன் சாலையோரக் கடையில் வேலை பார்த்துவருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள எல்‌.ஐ.சி காலனியில் கல்லூரி மாணவர் படித்து கொண்டே தன் அப்பாவுடன் பகுதி நேரமாக பருத்தி பால் போன்ற இயற்கை மூலிகை சூப் கடையை நடத்தி வருகிறார்.

காலையில் சத்யா விளையாட்டு அரங்கத்திலும், மாலையில் எல்.ஐ.சி காலனியிலும் இடைப்பட்ட நேரத்தில் கல்லூரி படிப்பிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். மாணவன் ஸ்ரீகாந்த், அப்பாவுக்கு பெறும் உறுதுணையாக உள்ளார்.

கல்லூரி மாணவன் ஸ்ரீகாந்த் இயற்கை மூலிகை சூப்பின் மகத்தான நன்மையை எடுத்து கூறினார். பருத்தி பால், தூதுவளை சூப், உளுந்தங்கஞ்சி, கொள்ளு, முடக்கத்தான் சூப், மூக்கிரட்டை, பிரன்டை, மணத்தக்காளி, வல்லாரை, காளான் போன்றவற்றில் ரசாயன கலவைகள் சேர்க்காமல் சூப் செய்து மக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகிறார.

மூலிகை சூப் கடை

காலையில் தஞ்சை சத்யா விளையாட்டு அரங்கத்திலும் மாலையில் மருத்துவ கல்லூரி எல்.ஐ.சி காலனியிலும் கடையை நடத்தி வருகிறார். இந்த சூப் வகைகள் உடலுக்கு நன்மை பயப்பதாக உள்ளதால் பலர் வந்து இதில் என்னென்ன பயன்கள் உள்ளது என இவரிடம் கேட்டு அறிந்து வாங்கி குடிக்கிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் உள்ளன.

மூலிகை சூப் கடை

தேனீர் அருந்துவதை காட்டிலும் இந்த வகையான சூப்புகளை குடிப்பது மன நிறைவாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளது என்கின்றனர் வாடிக்கையாளர்கள். இவரின் அப்பாவுக்கு உறுதுணையாக இருக்கும் இவர், அப்பா வேலைக்காக வெளியூர் செல்லும் சூழலில் யாரையும் எதிர்பார்க்காமல் அனைத்து வேலைகளையும் இவரே செய்கிறார்.

இதுகுறித்து பேசிய இளைஞர், ‘வேகமான வாழ்கையில் வீடு, வேலை என சுழன்று கொண்டிருக்கிறோம். உடலை பற்றி பெரிதும் கண்டுகொள்வது இல்லை. இப்படி இருக்கும் நிலையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களின் சத்தான உணவுகள் பலருக்கு அறியாமலேயே இருக்கிறது.

சொந்த ஊர் மன்னார்குடி குடி தான். கல்லூரி படிப்பிற்காக தஞ்சை வந்தோம். இங்கு வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் அப்பா ஏற்கெனவே கோயம்புத்தூரில் 2 வருடம் இந்த சூப் கடையை வைத்த அனுபவம் உண்டு. எனக்கும் அதன் மகத்தான நன்னையை எடுத்துரைத்தார். கல்லூரி செல்லும் நேர்த்தை தவிர்த்து இடைபட்ட நேரத்தில் சூப் கடையை நடத்தி வருகிறோம். எங்களை போன்ற சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை மூலிகை சூப் நன்மையையும் பெறுங்கள்’ என்று தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur