ஹோம் /தஞ்சாவூர் /

சுவாமி மலையில் கார்த்திகை திருவிழா தேரோட்டம்

சுவாமி மலையில் கார்த்திகை திருவிழா தேரோட்டம்

சுவாமலை முருகன்

சுவாமலை முருகன்

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை  சுவாமிநாதசாமி திருக்கோவிலில் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக உள்ளது. இந்த கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமிமலை சுவாமிநாதசாமி திருக்கோவிலில் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக உள்ளது. இந்த கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 27ந் தேதி தொடங்கியது.

கடந்த 28ஆம் தேதி காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மறுநாள் 29 தேதி முதல் 1ஆம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடும் நடந்தன. அதனை தொடர்ந்து 2ஆம் தேதி காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலா நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர்,  3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடந்தது. இந்நிலையில், 6ம் தேதி தேதி திருக்கார்த்திகை தினத்தையொட்டி திருத்தேர் வடம் பிடித்து திருவீதி புறப்பாடும் இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

Must Read : திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!

இரவு கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று (7ஆம் தேதி) சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு அவரோகணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

First published:

Tags: Car Festival, Local News, Thanjavur