ஹோம் /தஞ்சாவூர் /

Thanjavur | ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்- குரூப்-2 தேர்வின் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளி முதியவரின் கனவு

Thanjavur | ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்- குரூப்-2 தேர்வின் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளி முதியவரின் கனவு

தஞ்சை

தஞ்சை முதியவர்

Thanjavur | தஞ்சாவூரில் பார்வை மாற்றுத் திறனாளி முதியவர் குரூப்-2 தேர்வின் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராம்த்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 50 வயதைக் கடந்த கூலித் தொழிலாளியான இவர், வாழ்கையின் பாதியிலேயே பார்வை திறனை இழந்தார். இருந்தும் 1990 ம் ஆண்டு பூண்டி புஷ்பம் கல்லூரியில் BSC கல்லூரி படிப்பை முடித்த நிலையில் மேற்கொண்டு படிக்கவோ, வேலைக்கு செல்லவோ இயலாத நிலையில், விவசாய கூலி வேலையை செய்து வந்துள்ளார்.

தற்போது 100 நாள் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலை பெற வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. எனவே கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலைக்கு வந்து கொண்டு ஓய்வு நேரத்தில் 9 வகுப்பு வரை படித்த 65 வயதான மூதாட்டி பத்மாவதி என்பவராலும், 8-ம் வகுப்பு படித்து கௌரி என்ற பெண்னும் படிக்க படிக்க அதை கேட்டு தொடர்ந்து படித்து வந்த நிலையில் முதல் முயற்சியிலேயே Group 2 முதற்கட்ட (preliminary) தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சை முதியவர் 

இரண்டாம் கட்ட தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவேன் என்று கூறும் இவர் வேலைக்கு சென்று எங்கள் கிராமத்தை சேர்ந்த வயது முதிர்ந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவேன். அது தான் என்னுடைய ஆசை என்று மனம் உருக கூறினார்.

தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கு உதவுவதற்கு பத்மாவதியும் கௌரி என்கின்ற பெண்ணும் இருக்கிறார்கள். வெற்றி பெற்று என் கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேலையும் உணவும் வழங்குவேன். அதற்காகத்தான் இந்த வயதிலும் முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன் என்று மன உறுதியுடன் கூறினார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur