தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மாவட்டங்களில் ஒன்றாக தஞ்சாவூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம் உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, மணிமண்டபம் என பல வரலாற்று சிறப்புகள் வாய்ந்த இடங்கள் இங்கு உள்ளது தான்.
இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த இவ்வூரில் பரோட்டாவிற்கு ஃபேமசாக கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது 40 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாந்தி பரோட்டா கடை. 80ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவரையும் தனித்தன்மையான ருசியால் வெகுவாக கவர்ந்துள்ளது இக்கடை.
சுமார் 37 ஆண்டுகளாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த இக்கடை தற்போது கடந்த 3 ஆண்டுகளாக கீழவாசல் பகுதியில் செயல்படுகிறது. பழைய பேருந்து நிலையம் அருகே இருந்தபோது இக்கடையில் ஒரு நாளைக்கு 3000-3500 பரோட்டா விற்பனையானது. தற்போது இடமாற்றம் காரணமாக ஒரு நாளைக்கு 1500-2000 பரோட்டா வரை விற்பனையாகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
40 வருஷத்துக்கு முன்பு ஒரு பரோட்டா 10 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு பரோட்டா ₹13க்கு விற்பனையாகிறது. மேலும் இக்கடையில் நெய் குஸ்காவும் பேமஸாக உள்ளது. 40 ஆண்டுகளாக பரோட்டாவிற்கு தரும் சைவ குருமாவும், புதினா சட்னியின் சுவையும் பரோட்டா பிரியர்களை இன்று வரை ஈர்த்து வருகிறது. தஞ்சை மக்கள் மட்டுமின்றி தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பரோட்டா பிரியர்களின் தேர்வாகவும் சாந்தி பரோட்டா கடை இருந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Lifestyle, Local News, Thanjavur