ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில்

Thanjavur local holiday | ராஜ ராஜசோழன் சதய விழாவை ஒட்டி நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழன் சதய விழா, பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 2ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, 3ஆம் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வருகிற 3 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் சதய விழா நாளான 3ஆம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Holiday, Local News, Raja Raja Chozhan, Thanjavur