ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

தஞ்சை கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

தஞ்சை

தஞ்சை

Thanjavur Co Optex Store | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ்-ல் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மண்டலத்தில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.13 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க ; கொப்பரை கொள்முதல் காலம் நீட்டிப்பு - தஞ்சை கலெக்டர் தகவல்

தஞ்சாவூர் வைரம் நகரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், “தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் காலத்திற்கேற்ற வகையில் புதிய யுக்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்களை உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்துவருகிறது.

தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது 30 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; கும்பகோணம் ஊரில் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட் - இங்கு இத்தனை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா..!!

தற்போது பல்வேறு ரக பட்டுப்புடவைகள், காட்டன் சேலைகள், கூறை நாட்டு புடவைகள், போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி துண்டு ரகங்கள். பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ். மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில் தஞ்சை மண்டலத்தில் ரூ.7 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.13 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தஞ்சை வைரம் நகர் விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1 கோடியே 70 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore