ஹோம் /தஞ்சாவூர் /

இப்படி செய்தால் உளுந்து பயிரில் 25 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம் - தஞ்சை விவசாயிகளுக்கு அறிவுரை

இப்படி செய்தால் உளுந்து பயிரில் 25 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம் - தஞ்சை விவசாயிகளுக்கு அறிவுரை

உளுந்து பயிர்

உளுந்து பயிர்

Thanjavur Farmers | உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளித்தால் 25 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம் என தஞ்சாவூர் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கி, அதற்கான வழிமுறைகளை தெரிவிததுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

உளுந்து பயிரில் டிஏபி கரைசல் தெளித்தால் 25 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும் என வட்டார வேளண்மை உதவி இயக்குனர் சாந்தி, தஞ்சாவூர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும்.

1 ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊறவைத்து நன்கு கலக்கிவிட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு 1 ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். 35-வது நாள் பூக்கும் தருணத்தில் 1 முறையும், 45-வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் 1 முறையும் கரைசல் தயாரித்து 2 முறை தெளிக்க வேண்டும்.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

இவ்வாறு செய்வதால் மண்ணிலிருந்து நேரடியாக மணிச்சத்தை எடுத்துக்கொள்ள முடியாத பயிர்கள் டி.ஏ.பி. கரைசல் மூலமாக இலை வழியாக மணிச்சத்து அளிக்கும்போது, பயிர்கள் உடனடியாக மணிச்சத்தை பெறுவதுடன் உருவாகும் பூக்களை எல்லாம் பிஞ்சுகளாக மாறி காய்களாக உருவாகி அதில் உள்ள விதைகள் எல்லாம் நல்ல திரட்சியான எடையுடன் கூடிய தரமான மணிகளாக கிடைக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், வழக்கத்திற்கு மாறாக 1 ஏக்கரில் 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டி.ஏ.பி. கரைசல் தெளித்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை அணுகலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Farmers, Local News, Thanjavur