ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் 22 தாசில்தார்கள் இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி

தஞ்சாவூரில் 22 தாசில்தார்கள் இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி

தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்

தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்

Thanjavur | தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்ட வருவாய்துறையில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், ‘கும்பகோணம்-பாபநாசம் திருவிடைமருதூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ஜானகிராமன், பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த வட்டாட்சியர் புண்ணியமூர்த்தி, கும்பகோணம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், திருவிடைமருதூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கு பணியாற்றி வந்த சித்ரா, கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கார்த்திகேயன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை அரசு கேபிள் டி.வி நிறுவன தனி தாசில்தார் முருககுமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாபநாசத்தில் பணியாற்றி வந்த சுஜாதா, தஞ்சை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சிவக்குமார், ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த சுமதி, பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் ரீட்டா ஜெர்லின், கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

இங்கு பணியாற்றி வந்த இளமாருதி, ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய தமிழ் ஜெயந்தி, தஞ்சை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

நாகை அலகு முத்திரை கட்டண தனி தாசில்தாராக பணிபுரிந்த கஜேந்திரன், தஞ்சை கலால் மேற்பார்வை அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய மலர்குழலி, பட்டுக்கோட்டை அலகு முத்திரை தாள் கட்டண தனி தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த மல்லிகா தேவி, தஞ்சை கலால் அலுவலக மேலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இங்கு பணியாற்றி வந்த சுரேஷ், ஒரத்தநாடு தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த ஜெயலெட்சுமி, தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக பணிமாறுதல் பெற்றுள்ளார்.

தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக இருந்த சக்திவேல், தஞ்சை தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தாசில்தாராக பணியாற்றிய மணிகண்டன், நாகை அலகு முத்திரைத்தாள் கட்டண தனி தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் தாசில்தார் தங்கபிரபாகரன், தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளராக பணி மாறுதல் பெற்றுளார்.

பேராவூரணி தாசில்தார் அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் சமத்துவராஜ், தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக தலைமை உதவியாளராக பணிவிடை மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur