முகப்பு /தஞ்சாவூர் /

ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது.. தஞ்சை மக்களின் கருத்து என்ன?

ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது.. தஞ்சை மக்களின் கருத்து என்ன?

X
தஞ்சை

தஞ்சை மக்கள் கருத்து

Thanjavur people | 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் தஞ்சை மக்களின் கருத்து என்ன என்பதை பற்றி இச்சிறப்பு தொகுப்பில் காணலாம்.

  • Last Updated :
  • Thanjavur, India

கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19ஆம் தேதி அறிவித்தது. அதில், மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 4 மாத காலத்துக்குள், அதாவது செப்டம்பர் 30ம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் இந்த நடவடிக்கை குறித்து தஞ்சை மக்கள் கூறிய கருத்தை பின்வருமாறு காணலாம்.

சராசரி மக்களுக்கு பாதிப்பு இல்லை:-

2016 இல் ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளை தடை செய்து புதிய 500-ரூ 2000 ரூபாய் நோட்டுகளை ரிசவர் வங்கி அறிமுகப்படுத்தியது. நோட்டு அறிமுகப்படுத்திய நாளிலிருந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே 2000 நோட்டுகள் கண்ணில் தென்பட்டது. அதை பார்த்தே பல மாதங்களாக ஆகிவிட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் எங்களுக்கு தேவையே இல்லை 500 ரூபாயே போதும் நாங்கள் வாங்கும் 15 ஆயிரம் சம்பளத்திற்கு 10 நாட்களிலேயே செலவாகி விடுகிறது.

பெரும் பெரும் முதலாளிகள் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கே இது அதிர்ச்சி செய்தி. அரசே இதை அறிவித்து மீண்டும் அரசியல் திரும்ப பெறுவது எதனால் என்று தெரியவில்லை. ஆனால் தற்போது இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது ஒரு விதத்தில் அல்லது தான் ஆனால் மீண்டும் இது போன்று பணத்தில் விளையாட்டு வேலைகள் வேண்டாம்.

500-ரூ நோட்டே போதும்:

ஒரு சில உலக நாடுகளில் அதிகபட்சம் 500 ரூபாய் வரை தான் இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் மட்டுமே 2000 ரூபாய் வரை உள்ளது இது சாமானியர்களுக்கான அரசாக இருந்தால் இந்த 2000 ரூபாய் நோட்டை ஆரம்பத்திலேயே வெளியிட்டு இருக்காது மறுபடியும் திரும்ப பெறுவது வேடிக்கையாக இருக்கிறது.

நம் நாடு முழுவதும் பண கொள்ளையர்கள் பணத்தை பெரும் பெரும் முதலாளிகள் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்இவையெல்லாம் வெளிவர வேண்டும் என்பதற்காக தான் இந்த ஒரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பதை‌ நினைத்தால் ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தான் உள்ளது‌. எதுவாயினும் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை 500 ரூபாய் நோட்டுகளை அதிகபட்சம் இதுவே போதும்.

ஆன்லன் பரிவர்த்தனையின் ஆதிக்கம்:-

2000 ரூபாய் நோட்டுகள் என்பது பெரும்பாலான மக்கள் கண்ணில் பட்டே பல மாதங்கள் ஆகிறது இந்நிலையில் 2000 ரூபாய்க்கு மேல ஒரு கடையிலோ ஒரு வருடமோ பணம் தரவேண்டிய சூழலில் மட்டும் இல்லாமல் ஒரு ரூபாயில் இருந்து எல்லாமே ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷனாக மாறிவிட்டது.

ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் உள்ள குளறுபடிகளையும் அதில் உள்ள பிரச்சினைகளையும் தீர்த்து ஒவ்வொரு வங்கி கணக்கிலும் பணம் திருடு போகாமல் பாதுகாப்பான முறையில் விதிகளை செயல்படுத்த வேண்டும். வரும் காலங்களில் ரூபாய் நோட்டுகளை கையில் பார்ப்பது மிகவும் அரிதாக தான் இருக்கப் போகிறது தற்போது கூட பல இடங்களில் அப்படித்தான் இருக்கிறது எனவே கல்லூரி மாணவர்கள் பார்வையிலும் 2000 ரூபாய் நோட்டுகள் தேவை இல்லை என்று தான் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Demonetisation, Local News, Thanjavur