ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் ரேஷன் கடைகளில் 200 பணியிடங்கள் - இப்போதே விண்ணப்பியுங்கள்!

தஞ்சாவூர் ரேஷன் கடைகளில் 200 பணியிடங்கள் - இப்போதே விண்ணப்பியுங்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ration Shop Jobs | தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 200 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு தேர்வு இல்லாமல் ஆட்கள் நிரப்பட உள்ளன. இது குறித்து தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 200 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு எழுத்துத் தேர்வு இல்லாமல் ஆட்கள் நிரப்பட உள்ளன. இது குறித்து தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 200 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.

இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து http://www.drbtnj.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 2022 நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.drbtnj.in ) வெளியிடப்பட்டுள்ளன.

அதன், விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களு க்கான அறிவுரைகளை கவனத்தில் கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிமையாக விண்ணப்பிப்பது தொடர்பாக.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... பைக், காரில் சென்றால் இயற்கை அழகில் முழுமையாக மூழ்கித் திளைக்கலாம்!

https://youtube/G6c5e2ELJD8 என்ற வளையொளி (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drbpdstnjrecruit@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 04362 245442 வாயிலாகவும் தஞ்சாவூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பதாரர்கள் மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி, தாமதிக்காமல் நவம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெறுங்கள்

Published by:Suresh V
First published:

Tags: Local News, Ration card, Ration Shop, Thanjavur