ஹோம் /தஞ்சாவூர் /

டாஸ்மாக் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்.. தஞ்சை கலெக்டர் அறிவிப்பு..

டாஸ்மாக் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்.. தஞ்சை கலெக்டர் அறிவிப்பு..

டாஸ்மாக்

டாஸ்மாக்

Tasmac Closed : தஞ்சையில் 2 நாட்கள் டாஸ்மாக் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வருகிற 16ம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26ம் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது.

எனவே அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tanjore