ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் 2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - குடிமகன்களுக்கு போலீசார் எச்சரிக்கை.!

தஞ்சையில் 2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - குடிமகன்களுக்கு போலீசார் எச்சரிக்கை.!

தஞ்சை

தஞ்சை

Tanjore District | தஞ்சை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி,  மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அன்றயை தினத்தில் மதுவை கள்ளச் சந்தையிலும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அன்றயை தினத்தில் மதுவை கள்ளச் சந்தையிலும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் 9ம் தேதி மீலாடி நபி ஆகிய தினங்களை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சேர்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் 22 தாசில்தார்கள் இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி

மேலும், வரும் 2ம் தேதி காந்திஜெயந்தி, 9ம் தேதி மிலாடி நபி என்பதால் 2 நாட்களிலும் தஞ்சாவூர் மாவட்ட த்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் எப்.எல்.1, உரிமம் பெற்ற பார்கள் எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3(யு), எப்.எல்.3(யுயு) மற்றும் எப்.எல்.11 ஆகியவை கட்டாயம் மூடப்பட வேண்டும்.

விற்பனைகள் மேற்கொள்ள கூடாது. இந்த 2 நாட்கள் மது விற்றால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், அன்றை தினங்களில் மதுவை பதுக்கி வைத்துகள்ள சந்தைகளிலும் விற்றாலும் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசாரும் எச்சரிக்க விடுத்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore