ஹோம் /தஞ்சாவூர் /

மோடி, மு.க.ஸ்டாலினை நேரில் பார்க்க ஆசைப்படும் 116 வயது மிட்டாய் தாத்தா..

மோடி, மு.க.ஸ்டாலினை நேரில் பார்க்க ஆசைப்படும் 116 வயது மிட்டாய் தாத்தா..

மிட்டாய்

மிட்டாய் தாத்தா

Thanjavur Latest News : 1956 -ல் பர்மாவில் நடந்த கலவரத்தில் தனது 50 வயதில் குடும்பத்தை பரிகொடுத்துவிட்டு, தஞ்சைக்கு வந்து குடியேறி  தற்போது 116 வயது ஆகியும் மிட்டாய் விற்று தஞ்சை மக்களை வியக்க வைத்துள்ளார் மிட்டாய் தாத்தா.. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மக்களால்  ‘மிட்டாய் தாத்தா’ என அன்போடு அழைக்கப்படும் 116 வயதாகும் முகமத் அபுசாலிக்,  பர்மாவில் சொந்தமாக மளிகை கடை நடத்தியுள்ளார். 34 ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்து வந்த நிலையில் கடந்த 66 ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவில் நடந்த கலவரத்தில் இவர் தனது குடும்பத்தினர் மற்றும் சொத்துக்களை பறிகொடுத்துவிட்டு அகதியாக இந்தியாவிற்கு உயிர் தப்பி வந்துள்ளார்.

இவரது 50 வயதில் பர்மாவிலிருந்து உயிர் தப்பி கும்மிடிப்பூண்டிக்கு வந்த கப்பலில் வந்த இவர், கையில் போதிய பணம் இல்லாத நிலையில் அங்கிருந்து பாண்டிச்சேரி வழியாக தஞ்சைக்கு சிறிது தூரம் பேருந்திலும், பின்னர் பல கிலோமீட்டர் நடைபயணமாகவும்  நடந்தே வந்துள்ளார்.‌ இவருடன் கப்பலில் வந்த 2,000 க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் பல ஊர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மனம் தளராத முகமத் அபுசாலிக் தஞ்சைக்கு வந்து ‌ பழைய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க தொடங்கினார். அப்போது கடைக்காரர் ஒருவரிடம் மிட்டாய்கள் செய்ய கற்றுக்கொண்டுள்ளார்.

தனக்கு  கிடைத்த சம்பள பணத்தை மூலதனமாக வைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய்களை செய்து‌ பல ஊர்களுக்கு கால்நடையாக சென்று விற்பனை செய்ய தொடங்கி பல வருடங்களாக மிட்டாய் விற்பனை செய்து தற்போது ‘மிட்டாய் தாத்தா’வாக தஞ்சை மக்களின் அன்பை பெற்றுள்ளார்.

மிட்டாய் தாத்தா என்றழைக்கப்படும் முகமத் அபுசாலிக்

முன்னர் நடந்தும், சைக்கிளிலும் சென்று வியாபாரம் பார்த்து வந்த இவர், தற்போது வயோதிகம் காரணமாக நீண்ட தூரம் நடக்க முடியாத நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை  இவரின் இருப்பிடத்திற்கே சென்று மிட்டாய்களை வாங்குகிறார்கள். இவருக்கு தமிழ், இந்தி, பர்மீய மொழிகள் பேசத் தெரியும்.

மிட்டாய் தாத்தா என்றழைக்கப்படும் முகமத் அபுசாலிக்

116 வயதிலும் உழைத்து வாழ்ந்து வரும் மிட்டாய் தாத்தா நம்மிடம் பேசுகையில், “எனக்கு எந்த தீய பழக்கங்களும் இல்லை 116 வயதிலும் உழைத்து வாழ்கிறேன்.‌

மிட்டாய் தாத்தா

67 ஆண்டுகளாக மிட்டாய் செய்யும் தொழில் மட்டுமே செய்து வருகின்றேன்.தேங்காய் மிட்டாய், இஞ்சிமரப்பா குளுகோஸ் மிட்டாய் போன்ற ரக மிட்டாய்களை செய்கிறேன்‌ என்று கூறினார்.

மிட்டாய் தாத்தா

பலர் என்னை தேடி வந்து சிறு  சிறு உதவிகளை செய்தாலும் நான்‌ எனது மிட்டாய் தொழிலை கைவிட மாட்டேன், யாரிடமும் பணத்தை பெற்றுக்கொள்ள மாட்டேன், அப்படி வாங்குவது யாசகம் போலாகிவிடும், உழைத்து சம்பாதித்து தான் சாப்பிடவேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் மிட்டாய் தாத்தா.

மேலும் பிரதமர் மோடியையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் தான் வாழும் காலத்திற்குள் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையையும் மிட்டாய் தாத்தா நம்மிடம் வெளிப்படுத்தினார்.

மிட்டாய் வாங்க விரும்புபவர்கள் இவரை 9360931835 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

MittaiThaathaa
(முகமத் அபுசாலிக் - மிட்டாய் தாத்தா)  தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத்தெரு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur