ஹோம் /தென்காசி /

பெண்கள் சுயத்தொழில் தொடங்கி முன்னேற ரூ.50,000 கடன் உதவி... தென்காசி கலெக்டர் வழங்கினார்...

பெண்கள் சுயத்தொழில் தொடங்கி முன்னேற ரூ.50,000 கடன் உதவி... தென்காசி கலெக்டர் வழங்கினார்...

பெண்களுக்கு கடனுதவி

பெண்களுக்கு கடனுதவி

Tenkasi District News : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் 100 பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தலா ரூபாய் 50,000 கடன் உதவி வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ். 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், காவலா குறிச்சி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களுக்கு தகவல் வந்தது.

இந்நிலையில், அந்த பெண்களில்மிகவும் சிரமப்படும் 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களும் ரூபாய் 50,000 கடன் உதவி வழங்கி தொழில் தொடங்க உதவி செய்தார்.

”விடியல் மகளிர்” என்ற தொண்டுநிறுவனத்துடன் இணைந்து இந்த பெண்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் முதலீட்டு பணமாக ரூபாய் 50, 000 வழங்கிய நிலையில் தற்போது இந்த 100 பெண்களும் சுய தொழில் தொடங்கியுள்ளனர். தனியாகவும் கூட்டாகவும் அவர்கள்சுயதொழில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க : தென்காசி விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விளையாட்டு ஆணையம் அறிவிப்பு

கடனுதவி மற்றும் பயிற்சி பெற்ற பெண் ஒருவர் பேசும் போது, "சுய உதவி குழுவில் பணியாற்றிய நான் தற்போது என் குடும்பத்தையும் நன்கு கவனித்து வருகிறேன். பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்றவளாகவும்என் கணவருக்கு என்னால் இயன்ற பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த பயிற்சியில் ஈடுபட்டேன்.

மேலும் நிச்சயமாக வரும் நாட்களில் நல்ல நிலைக்கு உயருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னை ஊக்கப்படுத்திய தொண்டு நிறுவனம் மற்றும் பண உதவி செய்த மாவட்ட ஆட்சியர் இருவருக்கும் நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது. என்றும் அவர்களுக்கு நான் கடமைப்பட்டவளாகஇருப்பேன்” என்று உணர்ச்சி பொங்க பேசி முடித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi