முகப்பு /தென்காசி /

தென்காசியில் ஆயில் மில் நடத்தி வரும் பட்டதாரி பெண்.. எண்ணெய் அரைத்து கொடுக்க எந்த காசும் வாங்கறது இல்ல..

தென்காசியில் ஆயில் மில் நடத்தி வரும் பட்டதாரி பெண்.. எண்ணெய் அரைத்து கொடுக்க எந்த காசும் வாங்கறது இல்ல..

X
தென்காசியில்

தென்காசியில் ஆயில் மில் நடத்தி வரும் பட்டதாரி பெண்

Tenkasi Graduate Woman Running Oil Mill | தென்காசி பாவூர்சத்திரம் பகுதியில் ஆயில் மில் நடத்தி வரும் எம்.எஸ்.சி., மற்றும்  எம்.எட்., பட்டம் பெற்ற பிரியதர்ஷினி.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி பாவூர்சத்திரம் பகுதியில் ஆயில் மில் நடத்தி வரும் எம்.எஸ்.சி., மற்றும் எம்.எட்., பட்டம் பெற்ற பிரியதர்ஷினி . கணவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இத்தொழிலில் ஈடுபட்டு சாதித்து வருகிறார்.

இக்காலக்கட்டத்தில், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. கலைத் தொழில்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி துறைகளிலும் பணியாற்றுவது மட்டுமல்லாமல் சுய தொழிலிலும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் எம்எஸ்சி மற்றும் பிஎட் படித்து முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வந்த பிரியதர்ஷினி. தன் கணவன் மோகன் செய்து வரும் தொழிலில் நாமும் கை கொடுக்க வேண்டுமென்று, அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை அரைத்து சொந்தமாக ஆயுள் எடுக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

தென்காசியில் ஆயில் மில் நடத்தி வரும் பட்டதாரி பெண்

மேலும் இங்கு அரைத்துக் கொடுக்கப்படும் தேங்காய் எண்ணெய்க்கு எந்த வித கட்டணமும் கிடையாது. நன்கு காயவைத்த தேங்காயை கொடுத்தால் அரைத்து எண்ணெயை நம்மிடம் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக தவுடை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

1 லிட்டர் தேங்காய் எண்ணெய் 200 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 260 ரூபாய்க்கும், நல்லெண்ணெய் 330 ரூபாய் விற்பனை செய்து வருகின்றனர். பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக அளவில் தென்னை மரங்கள் இருப்பதால் இங்கு தேங்காய் எண்ணெய் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்ற வேண்டும் என்றும் பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்றும் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் பிரியதர்ஷினி.

    First published:

    Tags: Business, Local News, Money18, Tenkasi