ஹோம் /தென்காசி /

தென்காசி : காசி விஸ்வநாதர் கோயில் முன் மாணவிகள் பேரணி

தென்காசி : காசி விஸ்வநாதர் கோயில் முன் மாணவிகள் பேரணி

தென்காசி

தென்காசி

Tenkasi District News : தென்காசியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ம‌ற்று‌ம் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ம‌ற்று‌ம் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி ரயில் நிலையம் அருகில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியை திட்ட இயக்குனர்- ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ  கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், பாலின வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம், பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை புறக்கணிப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். முன்னதாக பாலின வன்முறை தவிர்த்தலுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க : பெண்கள் சுயத்தொழில் தொடங்கி முன்னேற ரூ.50,000 கடன் உதவி... தென்காசி கலெக்டர் வழங்கினார்...

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பேரணி நிறைவு பெற்றது. அப்போது, ராணி அண்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் மவுன மொழி நாடகம் நடைபெற்றது.

இதில் சமூக நல அலுவலர் முத்து மாரியப்பன், திட்ட இயக்குநர்- மகளிர் திட்டம் குருநாதன், உதவி திட்ட அலுவலர்கள் சிவகுமார், ரூபர்ட், சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, IUCAW காவல் உதவி ஆய்வாளர் ரத்னபால் சாந்தி,சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர்கள், ஊர் நல அலுவலர்கள்,ஒன் ஸ்டாப் சென்டர் ம‌ற்று‌ம் அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi