இந்திய கலாச்சாரம், குறிப்பாக தமிழக மக்களின் கலாச்சார அடையாளங்களில் கோலங்கள் முக்கியமானது கோலம் வரைதல். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த கோலங்கள் வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன.
பண்டிகைகளை வண்ணமயம் ஆக்குவதே இந்த கோலங்கள் தான். அதுவும் பொங்கல் பண்டிகையில் இந்த கோலங்களின் பங்கு இன்றியமையாதது. மார்கழி மாதம் பிறந்ததையொட்டி வீட்டின் வாசலில் கோலங்களை போடுவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதுவும் பொங்கல் நெருங்கிவரும்நிலையில் தங்களின் வீடுகளின் முன்பு பெண்கள் அழகாக கலர் கோலமிட்டு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோலமாவு விற்பனை அனைத்து மாவட்டங்களிலும் களை கட்டியிருக்கும். தற்காலிக கோலப்பொடி கடைகளும் பல்வேறு இடங்களில் வைக்கப்படுகிறது.
அந்தவகையில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் இந்த மாதங்களில் சரியாக கோலமாவு விற்பனையில் இறங்கியுள்ளனர் முத்துமாரி.
இது தொடர்பாக முத்துமாரி கூறும்போது, “இந்த தொழிலை கடந்த ஒரு வருடமாக செய்து வருகின்றனர். மார்கழி மாதத்தில் இருந்து தை மாதம் பொங்கல் வரை அதிக அளவில் கோலமாவுவிற்பனையாகும். காலையில் நாலு மணி நேரம் இந்த கோலம் மாவு தயார் செய்வதில் செலவிடுவேன். இதில் என் கணவரும் எனக்கு உதவி செய்வார்.
கோலப்பொடி தயார் செய்வதற்கு அரிசி மாவு அல்லது கோலமாவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் தேவைக்கேற்ப வண்ணங்களை கலந்து அதனை சுடு தண்ணீர் வைத்து நன்றாக கிளறுவோம். கட்டி இல்லாமல் வண்ணம் வரும் வரை இதை செய்வோம்.
அதன் பிறகு அதை வெயிலில் காய வைப்போம் இரண்டு நாளுக்கு இதை காய வைப்போம் காய்ந்த பிறகு கட்டி இல்லாமல் கோலம் போடுவதற்கு ஏதுவாக மாவு தயார் செய்வதற்காக மாவுகளை சல்லடை வைத்து சலித்து எடுப்போம்.
சலித்தெடுத்த மாவை ஒரு பாக்கெட்டுக்கு 100 கிராம் வீதம் பாக்கெட் போட்டு வைப்போம். ஒரு பாக்கெட் கோலமாவின் விலை ஐந்து ரூபாய் என்று விற்பனை செய்வோம். கோலப் பொடியை முறையாக விற்பனை செய்யும் பொழுது ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் வீதம் லாபம் கிடைக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சில்லறையாக வெள்ளைக் கோலப்பொடி விற்பனை செய்யும் பொழுது 150 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். கலர் கோலப்பொடியில் 200 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். பொங்கல் முடியும் முன் பத்தாயிரம் ரூபாய் வரை நான் லாபம் பார்த்து விடுவேன் என்று நம்புகிறேன்" என்றார் முத்துமாரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi