முகப்பு /தென்காசி /

தென்காசியில் மத்திய அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்..

தென்காசியில் மத்திய அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்..

மாதிரி படம்

மாதிரி படம்

Free Classes For Central Government Competitive Exam : தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மத்திய அரசு போட்டி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் முதல்வன் திட்டம் வாயிலாக சுமார் 150 மாணவர்களுக்கு மத்திய தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக செங்கோட்டை முழு நோ நூலகத்தில் வைத்து 25.05.2023 முதல் 100 நாட்களுக்கு காலை 10.00 மணி முதல் முற்றிலும் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

இப்பயிற்சி வகுப்புகள் TIMES VERANDA RACE போன்ற முன்னணி தனியார் பயிற்சி நிறுவனங்களை கொண்டு நடைபெறவுள்ளது. எனவே மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இப்பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு bit.ly/naanmuthalvan என்ற லிங்க் மூலமாகவும்தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து இணைந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை அலுவலக வேலை நாட்களில் கதவு எண்:168, முகமதியா நகர் (எபினேசர் வடல்ஸ் பின்புறம்) குத்துக்கல் வலசை என்ற முகவரியில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04633-2131719 என்ற தொலைபேசி வாயிலாகவோ கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Tenkasi