ஹோம் /தென்காசி /

குற்றாலத்திற்கு சென்றால் அருவிகளில் குளிக்க முடியுமா? - நிலவரம் என்ன?

குற்றாலத்திற்கு சென்றால் அருவிகளில் குளிக்க முடியுமா? - நிலவரம் என்ன?

குற்றாலம்

குற்றாலம்

Tenaksi District News : தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளதால், சுற்றுலா  பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்து வந்தது. இதனால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியதால், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த அருவிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுவை, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர். ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றலாம் மெயில் அருவியை விரும்பி குளித்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க : தென்காசி: ரூ.5கோடி வரை பிஸினஸ் ப்ளான் இருக்கா? கடனுதவிக்கு அரசு ரெடி.. முழு விவரம்!

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தென்காசி, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பாதுகாப்பு வளையை தாண்டியும் தண்ணீர் கொட்டியது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு போலீசார் அங்கு குளிக்க தடை விதித்தனர்.

மேலும் குற்றாலம் மெயின் அருவிகளுக்கு குளிக்க வந்த ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா வாசிகள் தடை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். வெள்ளப் பெருக்கு குறைந்தவுடன் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த பகுதிகளில் குளிக்க தடை இல்லை :

ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் அளவாக வருதால், இங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. மேலும், குற்றாலம் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Courtallam, Local News, Tenkasi