ஹோம் /தென்காசி /

”பெண்களை சமமாக நடத்துவோம் ” - தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி

”பெண்களை சமமாக நடத்துவோம் ” - தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

Thenkasi News :தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பாலின சமத்துவ உறுதிமொழி எடுக்கப்பட்டது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாலின சமத்துவ உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழியின் தொடர்ச்சியாக பெண்களை சமமாக நடத்த வேண்டும் என்ற கையெழுத்து பிரச்சாரத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சமூக நலத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட மாட்டோம் என்று கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. அதை தென்காசி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

பின்னர் பெண்களை வீட்டிலும் வேலையிடத்திலும் பெண்களை சமமாக நடத்துவோம் என பாலின சமத்துவ உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 511 மனுக்கள் பெறப்பட்டது.

இதையும் படிங்க:  திருச்சி மலைக்கோட்டையில் தொடர்ந்து 3 நாட்கள் எரியும் கார்த்திகை மகா தீபம்

பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர்: சுப கோமதி ( தென்காசி)

First published:

Tags: Local News, Tamil News, Tenkasi