முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் தண்ணீர் குழாயில் உடைப்பு.. ஒரு அடிவரை பள்ளமான தார் சாலை..

சங்கரன்கோவிலில் தண்ணீர் குழாயில் உடைப்பு.. ஒரு அடிவரை பள்ளமான தார் சாலை..

X
சங்கரன்கோவிலில்

சங்கரன்கோவிலில் தண்ணீர் குழாயில் உடைப்பு

Water Pipe Burst in Sankarankoil : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஒரு அடிவரை பள்ளம் ஏற்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாலை விரிவாக்க பணி மற்றும் 2 வழிச்சாலை பணிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ராஜபாளையம் சாலையில் புதிதாக 2 வழி தார் சாலை போடப்பட்டது. சாலை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்பும், ஆங்காங்கே குழிகள் காணப்படுகின்றன.

மேலும், தற்போது ராஜபாளையம் சாலையில் தபால் நிலையத்திற்கு முன்புறம் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கே, ஒரு அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு சாலையில் நீரோடை போல் ஓடிக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் இப்படி தண்ணீர் வீணாவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சங்கரன்கோவிலில் தண்ணீர் குழாயில் உடைப்பு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, சங்கரன்கோவிலில் ஆங்காங்கே குடிநீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் அவ்வப்போது தண்ணீர் ஓடுவதும் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, துறைசார்ந்த அதிகாரிகள் தண்ணீர் வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கரன்கோவில்வாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tenkasi