வெள்ளையனே வெளியேறு என விடுதலை முதற்கத்தை முதலில் எழுப்பிய நெல்கட்டும் செய்வளை ஆண்ட மன்னன் புலி தேவர் மாளிகை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டம் நெல்கட்டும் சேவல் ஊராட்சியில் அமைந்திருக்கிறது.
சுதந்திர போராட்ட வீரரான புலித்தேவர் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நெற்கட்டும் சேவல் மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மேலும் புலி தேவர் தேர்தல் நேரங்களில் வாக்கு வங்கிக்காக மட்டுமே கையில் எடுக்கப்பட்டாரா என்பது இந்த ஊர் மக்களின் கேள்வியாக இருந்து வருகிறது.
நெல்கட்டும்சேவல் ஊர் மக்களின் பிரதான கோரிக்கைகளாக அந்த ஊரை சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முக சுந்தரபாண்டியன் முன்வைத்த கோரிக்கைகள்:
1. சங்கரநாராயணன் திருக்கோவிலில் அமைந்திருக்கும் புலி தேவர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் புலிதேவரின் ஓவியத்தில் உள்ள வண்ணங்கள் உரிந்து கொண்டு வருகிறது. அதனை மாற்றிவிட்டு வெண்கல சிலை ஒன்றை புலிதேவர் அறையில் வைக்க வேண்டும்.
2. முதல் சுதந்திர போராட்ட வீரர் என்று கலைஞர் அவர்களால் கூறப்பட்டவர் மாமன்னன் தேவர் ஆவார் ஆனால் இந்த அளவும் அதற்கான முறையான அரசாணை வெளியிடப்படவில்லை. விரைவில் முதன் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் புலி தேவர் என்று அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.
3. அரசு அலுவலகங்களில் பொதுத்தேவரின் படங்கள் வைக்கப்பட வேண்டும்.
4. ஒரு நெல் மணியை கூட ஆங்கிலேயருக்கு வழியாக கொடுக்க மாட்டேன் என்று போராடியவர் தான் நெல்காட்டான் சேவல் மன்னன் புலி தேவர் காலப்போக்கில் மருவி நெல்கட்டும் சேவல் என்று மருவிவிட்டது. அதன் பொருள் வேறாக இருப்பதால் இந்த ஊரின் பழைய பெயரான நெல் கட்டான்செவல் என்னும் பெயரை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
5. நெல்கட்டும்சேவல் ஊரில் அமைந்திருக்கும் மாமன்னர் புலி தேவரின் மாளிகை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட வேண்டும்.
6. புலித்தேவர் மன்னனின் தளபதியான ஒண்டிவீரன் மற்றும் வெண்ணீர்கலடியர் ஆகியோருக்கு பாரதிய ஜனதா கட்சியால் வெளியிடப்பட்ட தபால் தலை கூட புலித்தேவரின் பெயரில் வழங்கப்படவில்லை. தமிழக கட்சியால் முறையாக முதல் சுதந்திரப் போராட்ட வீரரான புலித்தேவர் கௌரவிக்கப்பட வேண்டும்.
7. மேலும் செப்டம்பர் 1 தேதி நடைபெறும் புலி தேவர் ஜெயந்தி அன்று தமிழக ஆளும் கட்சியால் முறையாக புலித்தேவர் கௌரவிக்கப்பட வேண்டும். திமுக ஆட்சி காலத்தில் பத்து அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர் ஜெயந்தி விழாவிற்கு வருகை புரிவது வழக்கம். ஆனால் அதிமுக காலங்களில் புலித்தேவர் அவமரியாதை செய்யப்பட்டார் ஒரு அமைச்சர் கூட ஜெயந்தி விழாவிற்கு வருகை தரவில்லை.
8. மாமன்னர் பூலித்தேவரின் கோட்டை முறையாக ஆய்வு குழுக்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் மேலும் சீரழிந்து இருக்கும் புலி தேவர் மாளிகை சீரமைப்பு வேண்டும். கோட்டையின் தரைத்தளத்தை மட்டும் சுமார் 60 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது என அதிமுக ஆட்சி காலத்தில் கூறப்பட்டது.
ஆனால் கோட்டையின் மேல் தளம் மற்றும் கழிப்பறைகள் பராமரிப்பின்றி கிடக்கின்றது. இது குறித்து பலமுறை முதலமைச்சர்த தனி பிரிவு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அதே இடங்களுக்கு மனுக்கள் அனுப்பியும் இன்றளவும் எந்த பதிலும் இல்லை. அதனை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
9. தமிழகத்தின் பெருமைகளை முதல்வருக்கு கடிதம் எழுதும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தென்னகத்தின் பெருமையான மாமன்னர் புலிதேவர் பற்றி இன்றளவும் பாரத பிரதமருக்கு ஏன் கடிதம் எழுதப்படவில்லை என்பது இந்த பகுதி மக்களின் கேள்வியாக இருந்து வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
10. அமைச்சரவையில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் சொல்லி தேவர் என்று அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
போன்ற பல கோரிக்கைகளை நெல்கட்டும் சேவல் பகுதி மக்களின் சார்பாக சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் எழுப்பி உள்ளார்.
மேலும் தேர்தல் நேரங்களில் வாக்கு வங்கிக்காகவே புளி தேவர் கையில் எடுக்கப்பட்டாரா என்றும் பாரத பிரதமருக்கு இன்றளவும் புலிதேவரை பற்றி ஒரு கடிதம் கூட மு க ஸ்டாலின் எழுதியிருக்கிறாரா என்றும் இவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் இது பெரும் போராட்டமாக வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi