ஹோம் /தென்காசி /

வாரிசு படம் தென்காசி மக்களை கவர்ந்ததா? ரசிகர்கள் கூறுவது என்ன?

வாரிசு படம் தென்காசி மக்களை கவர்ந்ததா? ரசிகர்கள் கூறுவது என்ன?

X
வாரிசு

வாரிசு பட ரியாக்‌ஷன்

Varisu movie FDFS Reaction | வாரிசு துணிவு படங்களின் அதிகாலை காட்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் ரத்து செய்த நிலையில், பொதுமக்கள் காத்திருந்து 7 மணி காட்சியை கண்டு ரசித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்த துணிவு படங்கள் உலகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டது.

இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்த்து உருவாகி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த திரைப்படங்களில் அதிகாலை காட்சிகளை ரத்து செய்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர்.

இதை அடுத்து அதிகாலை காட்சிகளை காண்பதற்கு திரையரங்குகளில் கூடியிருந்த ரசிகர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவித்தனர். பி எஸ் எஸ் தியேட்டர் வெளியிலும் கூடியிருந்த ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

தென்காசியில் வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சி காலை 10 மணி அளவில் தான் தொடங்கியது. துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள கீதாலயா திரையரங்கில் வாரிசு படத்தின் காலை காட்சி பார்த்து திரும்பிய ரசிகர்களிடம் படம் பற்றிய கருத்தை கேட்போம். ரசிகர்கள் தெரிவித்த பல்வேறு சுவாரஸ்ய கருத்துக்களை இத்தொகுப்பில் காண்போம்..

First published:

Tags: Local News, Tenkasi, Varisu, Vijay fans