முகப்பு /தென்காசி /

தர்மதுரை படத்துல விஜய்சேதுபதி குளிச்ச அருவி இது தான்..! எங்க இருக்கு தெரியுமா?

தர்மதுரை படத்துல விஜய்சேதுபதி குளிச்ச அருவி இது தான்..! எங்க இருக்கு தெரியுமா?

X
தென்காசி

தென்காசி அருவி

Old Courtallam Waterfalls | கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு குழந்தை தவறி விழுந்து அப்புறம் ஒரு இளைஞர் அந்த குழந்தையை தைரியமா காப்பாற்றிய இடமும் இதுதான்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்றல் தழுவும் தென்காசியில் சீசன் நேரங்களில் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவியை நம்ம பார்த்திருப்போம். அதே குற்றாலம் அருவி சீசன் இல்லாத நேரத்துல எப்படி இருக்குன்னு உங்களுக்கு காட்ட வேண்டாமா., அதுக்கான வீடியோ பதிவு தான் இது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற பழைய குற்றாலத்துக்கு தான் வந்திருக்கிறோம்.

பொதுவா சீசன் நேரங்கள்ல அருவி கிட்ட வரைக்கும் நம்மளோட வாகனங்களை எடுத்துட்டு வர முடியாது. ஆனால் இப்போ சீசன் இல்லை அப்படிங்கிறதுனால கூட்டமும் இல்ல அதனால அருவிக்கு கிட்ட வரைக்கும் நம்மளோட வண்டியில் வந்தரலாம் பக்கத்துலயும் பார்க் பண்ணிக்கலாம்.

நம்மில் பலருக்கு தெரிஞ்சிருக்கும். தர்மதுரை படத்தில் நம்ம விஜய் சேதுபதி அப்படியே ஃபீல் பண்ணிக்கிட்டே வந்து இந்த அருவில தான் குளிப்பாரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு குழந்தை தவறி விழுந்து அப்புறம் ஒரு இளைஞர் அந்த குழைந்தைய தைரியமா காப்பாற்றிய இடமும் இதுதான். அந்த சம்பவத்துக்கு அப்புறமா இங்க இரும்பு கம்பியால் தடுப்பு அமைச்சுட்டாங்க.

பழைய அருவில பாறையை ஒட்டி ரொம்ப கொஞ்சமா தான் தண்ணி வந்துட்டு இருந்துச்சு. அதனால வெளியூர்ல இருந்த சுற்றுலா பயணிகள் வரல இருந்தாலும் இங்கே பக்கத்தில் இருக்கிற மக்கள் மட்டும் இங்க வந்து குளிச்சிட்டு இருந்தாங்க. ஆண்கள் பக்கத்துலயாவது கொஞ்சம் தண்ணி வந்துச்சு பெண்கள் பக்கத்துல சுத்தமா தண்ணி வரல குழாயில வர மாறி தான் ரொம்ப கொஞ்சமா தண்ணி வந்துட்டு இருந்தது.

விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை:

அங்கிருந்து வந்து ரெண்டு ஸ்விம்மிங் பூல் மாதிரி தண்ணீர் தேங்கி இருக்கும் அதுல சின்ன பிள்ளைங்க விளையாடுறதுக்கு குளிக்கறதுக்கு ஏத்த place. சீசன் நேரத்துல அதிக அளவுல தண்ணி வந்தப்போ இதுல விளையாண்டுட்டே குளிச்சிட்டு இருந்த அந்த குழந்தை இந்த ஓட்டை வழியா கீழ விழுந்துட்டாங்க. அது தொடர்ந்து இங்கே இப்போ கம்பி வேலிகள் அமைச்சுருக்காங்க இனிமே குழந்தைகள் இங்கே குளிக்கிறதுக்கு ரொம்ப பாதுகாப்பாக இருக்கும். விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை படத்தில்“எந்தப்பக்கம் காணும்போதும்வானம் ஒன்று நீ எந்தப்பாதைஏகும்போதும் ஊா்கள் உண்டு” என்ற பாடலில் விஜய் சேதுபதி குளிப்பது போன்ற காட்சி இந்த அருவியில் தான் படமாக்கப்பட்டது. இந்தப்படம் மட்டுமல்லாமல் பல படங்களின் ஷூட்டிங் இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

காமராஜர் திறந்து வைத்தஅருவி:

பழைய குற்றாலத்தை ஆகஸ்ட் 1960 ல முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இங்கே ஒரு உயரமான பைப்ல அருவியில இருந்து வர்ற தண்ணியை நேரடியா சேகரிச்சுட்டு இருக்காங்க. அடிக்குற வெயிலுக்கு இரும்பு பைப்ப தொட்டா சுட தானே செய்யணும்.. ஆனா அருவியிலிருந்து வர தண்ணி எல்லாத்தையும் சேகரித்து கொண்டு போற இந்த பைப்ப தொட்டு பாக்குறதுக்கே குளுகுளுன்னு இருந்துச்சு அப்போ இதுல குளிச்சா எப்படி இருக்கும்.

சீசன் நேரங்கள் ல சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில், கவர் எல்லாமே அடிச்சு சென்று பாறைகளோட இடுக்கில் சிக்கி இருக்கிறத சீசன் இல்லாத நேரத்துல நம்மளால பாக்க முடியும். இயற்கையை ரசிக்க வர்ற நம்ம அந்த இயற்கையை மாசுபடுத்தாத வகையில் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

சீசன் இல்ல அப்படிங்கிறதுனால உடைமாற்றும் இடம் கழிப்பறையின் எல்லாமே பூட்டு போட்டு பூட்டி இருந்தாங்க.

ஆயில் மசாஜ்:

முன்ன எல்லாம் ஆயுர்வேதிக் மசாஜ் அப்படின்னு சொல்லிட்டு குற்றாலத்தில் ஆயில் மசாஜ் பண்றதுக்கு தனியா இடம் ஒதுக்கி இருப்பாங்க வர சுற்றுலா பயணிகளும் ஆயில் மசாஜ் பண்ணிட்டு அருவில குளிப்பாங்க. ஆனா இப்போ என்னை சோப்பு ஷாம்பு பொருட்கள் அறிவியல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கறதால அந்த இடம் முழுக்க குப்பை கூலமா இருந்துச்சு.

தமிழ் சித்தர்கள்ல முதன்மையானவர் என்று அழைக்கப்படுற அகஸ்தியர் ஓட சிலை இப்படி உடைஞ்சு ஓரமா இருக்கிறதையும் இந்த பழைய அருவி ல நம்ம பாக்க முடியும்.

சீசன் இல்லாத நேரத்துல குற்றாலத்தை பார்த்து ரசிச்சிட்டு, ஒரு ஓலை நிறைய பனை தவுன் சாப்டுட்டு போற வழியில குரங்கு மூஞ்சி வச்சிட்டு வால் நீளமா ஒரு விளங்க பார்த்தோம் இது என்ன விலங்குன்னு உங்களுக்கு தெரிஞ்ச மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க அண்ட் தென்காசி உள்ளூர் செய்திகளை தொடர்ந்து தெரிசுகுறதுக்கு நியூஸ்18 உள்ளூர் செய்திகள் சேனலை subscribe செய்ங்க.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Courtallam, Local News, Tenkasi, Tourist spots