முகப்பு /தென்காசி /

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோவிலில் வசந்த உற்சவம்.. 

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோவிலில் வசந்த உற்சவம்.. 

X
கரிவலம்வந்தநல்லூர்

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோவிலில் வசந்த உற்சவம்

Tenkasi Temple Festival : தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் திருக்கோவிலில் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து மே 5, 6, 7 ஆகிய 3 தினங்களிலும் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். கரிவலம்வந்தநல்லூரில் எந்தை ஒப்பனை அம்மாள் சாமி த பால் வண்ண நாதர் கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோவிலில் வசந்த உற்சவம்

சித்திரை மற்றும் வைகாசி மாதம் வசந்த காலங்களாக கருதப்படுகிறது. மேலும் சில ஆலயங்களில் வைகாசி விசாகத்திற்கு முன்பு வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கமான ஒன்று.

சுவாமி மற்றும் அம்பாள் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi