வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படும். மது, கைடபர்கள், ஆகிய அசுரர்கள் பகவான் விஷ்ணுவோடு யுத்தம் செய்து முடிவில் அவரின் பராக்கிரமத்தை அறிந்து அவரை சரணடைந்து தங்களுக்கு வைகுண்ட பதவி வேண்டும் என்று கேட்டனர். விஷ்ணுவும் மகிழ்ந்து சொர்க்க வாசலை திறந்து அவர்களையும் வைகுண்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
அப்போது வைகுண்டம் அடைந்த அசுரர்கள், ”பகவானே மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியான இந்த நாளில் எங்களுக்கு சொர்க்கவாசலை திறந்து அருளியது போன்று யாரெல்லாம் தங்களின் ஆலயத்திற்கு வந்து உங்களை வணங்குகிறார்களோ, அவர்களுக்கும் சொர்க்க வாசலை திறந்து வைகுண்ட பதவியை அருள வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். மகாவிஷ்ணுவும் ”அவ்வாறே ஆகட்டும்” என்று வரம் தந்தார்.
அதன் சாட்சியாகவே இன்றும் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட வாசல் திறக்கும் வைபவம் ஒவ்வொரு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று நடைபெறுகிறது. இந்த நாளில் சொர்க்கவாசல் வழியாக நுழைந்து சென்று பெருமாளை கண்டு தரிசனம் செய்தால் மோட்சம் நிச்சயம் என்பது ஐதீகம். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் அந்த வாசலின் வழியாக கோவிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதே போல தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணர் திருக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை பூஜை கடந்த நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவாதிரை ஆறாவது திருநாளான நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு இறைவன் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi, Vaikunda ekadasi