முகப்பு /தென்காசி /

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்!

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்

Tenkasi | தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் இரவிச்சந்திரன்தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெறப்பட்டது.

மாற்றத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள் தலா ரூ.13,500 மதிப்பில் மொத்தம் ரூ.27,000 மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் ரூ.13,500 மதிப்பில் மொத்தம் ரூ.40,500 தொன்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்கள்.

மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 208 மொத்தம் மனுக்கள் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tenkasi