ஹோம் /தென்காசி /

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையில் விழுந்த முதாட்டி.. மேலும் விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா சங்கரன்கோவில் நகராட்சி?

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையில் விழுந்த முதாட்டி.. மேலும் விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா சங்கரன்கோவில் நகராட்சி?

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்

Sankaranakovil : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிபுரம் இரண்டாம் தெருவில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் அபாய நிலையில் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறைக்கு நகராட்சி நிர்வாகத்திற்கும் உள்ள எல்லை பிரச்சனையால் பொதுமக்கள் அவதி.  

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிபுரம் இரண்டாம் தெருவில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் அபாய நிலையில் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறைக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் உள்ள எல்லை பிரச்சனையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். கோமதிபுரம் இரண்டாம் தெரு தான் சங்கரன்கோவில் இரண்டு வழி மெயின் சாலையையும், நீதாலயா தியேட்டர் சாலையையும் இணைக்கும் ஒரு பிரதான சாலையாகும். பாதாள சாக்கடை பணிகளுக்காக இந்த சாலை தோண்டப்பட்டு ஒரு வாரமாக மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது “இது நெடுஞ்சாலை துறை கீழ் வருவதால் இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளாது ” என பதிலளித்தார். நகராட்சியா அல்லது நெடுஞ்சாலைத்துறையா என்ற பிரச்சனையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சாலை வழியாக சென்ற மூதாட்டி கால் இடறி இந்த கழிவுநீர் சாக்கடைக்குள் விழுந்தார்.

இதனைக்கண்டு சற்றும் யோசிக்காமல் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் சாக்கடைக்குள் குதித்து மூதாட்டியை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதையடுந்து இந்த கழிவுநீர் கால்வாய் அருகிலேயே தான் குடிநீர் இணைப்பு குழாய் செல்வதால் சில சமயங்களில் கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்னர் சரி செய்யுமா நகராட்சி? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

First published:

Tags: Local News, Tenkasi