கைத்தறித்துறை இந்திய பொருளாதாரத்தில் கணிசமான அளவு பங்களிக்கிறது. பல காலமாகவே கிராமப்புற கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. எனினும் இந்த கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் பவர்லூம் பயன்பாட்டின் காரணமாக பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். இடைத்தரகர்கள் தலையீட்டால் சரியான லாபம் கிடைப்பதில்லை. அதேசமயம் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யவும் முடியவில்லை.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூரைச் சார்ந்த கோபால் என்பவர் 35 வருடமாக கைத்தறி நெசவு செய்து வருகிறார். கைத்தறி நெசவு செய்வதில் இருக்கும் சவால்கள் குறித்து அவர் கூறுகையில், “ நான் 35 வருஷமா கைத்தறி நெசவு செய்யுறேன். 18 வயசுல இந்த தொழிலுக்கு வந்தேன். சொசைட்டியில பதிவு செய்து காதி பிரிவின் கீழ் கைத்தறி மூலம் துண்டுகளை நெசவு செய்கிறேன்.
இந்த தொழிலில் ஒருநாளைக்கு 50 ரூபாய்ல இருந்து 100 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. ஒருநாளைக்கு என்னால் 10 துண்டு தான் நெசவு செய்ய முடியும். இந்த பணம் என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள போதுமான இல்லை.
விசைத்தறியில் நெசவு செய்பவர்களை காட்டிலும் கைத்தறியில் நெசவுசெய்பவர்களே அதிக உடல் உழைப்பை பயன்படுத்துகின்றோம் .அதனை அரசாங்கம் கருத்தில் கொண்டு எங்களுக்கு ஊதிய உயர்வு மற்ற சலுகைகளை செய்ய வேண்டும். என்று கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க : 18 மணி நேரம் வேலை செய்கிறோம்.. குறைந்த ஊதியமே கிடைக்கிறது- பெண்கள் வேதனை
நெசவாளர் களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேதமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.கைத்தறித் துணிகள் விற்பனையைப் பெருக்கவும் சந்தையில் பிற நிறுவனங்களின் ஏற்படக்கூடிய போட்டியைச் சமாளிப்பதற்கும், உற்பத்தியில் புதுப்புது வகைகளை அறிமுகம் செய்கிறது இந்நிறுவனம். எனினும் கைத்தறி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு இன்னும் சரியாக இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் பல கிராமங்களில் வாழும் நெசவாளர்களின் வாழ்வு மேம்படும்.
செய்தியாளர் : சுபா கோமதி (தென்காசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Handloom workers, Local News, Tamil News, Tenkasi, Tirunelveli