முகப்பு /தென்காசி /

தென்காசி ரயில் நிலையத்தை பசுமையாக்கும் முயற்சி.. மரக்கன்றுகளை நடும் தன்னார்வலர்கள்

தென்காசி ரயில் நிலையத்தை பசுமையாக்கும் முயற்சி.. மரக்கன்றுகளை நடும் தன்னார்வலர்கள்

X
Wildlife

Wildlife day 

Thenkasi | தென்காசி ரயில் நிலையத்தில் உலக வன உயிரின தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி ரயில் நிலையத்தில் உலக வன உயிரின தினம் கொண்டாடப்பட்டது.  தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரயில்வே இந்த நிகழ்ச்சியை நடத்தியது. வன உயிரின தினத்தை அனுசரிக்கும் வகையில் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியின்போது வரவேற்புரை ஆற்றிய ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, வன உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் மரங்களின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து பேசிய சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, 'தமிழ்நாடு அரசு மரம் நடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது. மரங்கள் நடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி ரயில் நிலையத்தில் தற்போது மரங்கள் வெட்டப்பட்டு வந்த நிலையில் சில வருடங்களில் நிறைய மரங்கள் வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மரம் நடுவது முக்கியமல்ல அதை நல்ல முறையில் பராமரித்து பெரிய மரமாக வளர்க்க வேண்டும்' என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி பிராணா அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் காவல்துறை, வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi