தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து வெளி மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் வெளிநாடுகளான மலேசியா, கோலம்போ மற்றும் அரபு நாடுகளுக்கும் வத்தல் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் வத்தல் மார்க்கெட்டுகளில் இருந்துதான் தான் அதிக அளவில் வத்தல் கொள்முதல்களும் ஏற்றுமதியும் நடந்து வருவதாக சொல்கின்றனர். அத்துடன், பிரபல தனியார் மசாலா தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நம்ம சங்கரன்கோவிலில் இருந்துதான் வத்தலை வங்கிச் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போதைய சங்கரன்கோவிலில் வத்தல் மார்க்கெட்டின் ஒரு குவிண்டாலின் விலை 18 ஆயிரத்திலிருந்து 22 ஆயிரம் வரை விற்பனை செய்து வருவதாகவும், சங்கரன் கோவில் வத்தல் சங்கத் தலைவர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் வத்தல் மார்க்கெட் மிக பெரிய அளவில், வத்தல் வயாபாரம் பாரம்பரியமாக நடைபெறும் இடமாக இருந்து வரும்கிறது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சங்கரநாராயணர் கோவிலுக்கும் வடக்கு ரத வீதிக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்த வீதிகளில் வத்தல் மார்க்கெட் நடந்து வருகிறது. அந்த வீதிகளில் சென்றாலே வத்தல் கமருவதை உணர முடியும்.
இங்கே, திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், இந்த பகுதியில் வத்தல், பருத்தி, நிலக்கடலை, தானியங்கள் ஆகியவையும் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யும் கமிஷன் கடைகள் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடியும்.
இங்கே, சீசன் நேரங்களுக்கு ஏற்ப, விற்பனைகள் நடைபெறும். இந்நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்னர், பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நலையில், இந்த வத்தல் தொழிலில் ஏற்றுமதியில் எந்தவித பாதிப்பும் இன்றி சுமுகமாக நடந்து வருவதாக வத்தல் சங்கத் தலைவர் மாரிமுத்து தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த வத்தல் மார்க்கெட்டில் இன்றும், துண்டுகளைக் கொண்டு, கைகளை மறைத்தவாறு ஏலம் எடுக்கும் பழங்காலத்து முறை இருப்பதை இன்றும் பார்க்க முடியும். இதே முறைப்படி தான் இன்றளவும் இங்கு ஏலம் எடுத்து வரப்படுவதாக சொல்லப்டுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi