முகப்பு /செய்தி /தென்காசி / சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு... குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி...!

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு... குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி...!

ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்

ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்

தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து, குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

  • Last Updated :
  • Courtalam (Courtallam), India

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை,  ஆகஸ்ட் மாதங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் இங்குள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, குற்றால மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்பரித்து வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே மலைப் பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்ததால் அனைத்து அருவிகளும் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இதனால்  சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, குற்றாலம் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவியில் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்  மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர்.

இதையும் படிக்க : 55 ஆண்டுகளுக்கு பின் ஒன்றுகூடிய முன்னாள் மாணவர்கள்

இந்த நிலையில் இன்று காலை முதல் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர்ந்து, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.

top videos

    மேலும் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், கோடைக் காலத்தில் அருவிகளில் தண்ணீர் வருவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நீண்ட நேரம் அருவியில் குளித்து செல்வதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Falls, Tamil News