முகப்பு /தென்காசி /

குற்றாலம் போறீங்களா? அப்போ இதை கேட்டு போங்க!

குற்றாலம் போறீங்களா? அப்போ இதை கேட்டு போங்க!

குற்றாலம்

குற்றாலம்

Tenkasi Rain | தென்காசி மற்றும் குற்றால சுற்றுவட்டார பகுதியில் பெய்து வந்த கனமழை காரணத்தினால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுக்கு ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சீசன் நேரங்கள் தொடங்கும். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் விழும் மூலிகை தண்ணீரில் குளிப்பதற்கு அதிக அளவில் வருகை தருவார்கள்.

ஐந்தருவி சிற்றருவி பழைய அருவி புலி அருவி மெயின் அருவி என பல்வேறு அருவிகள் இருந்தாலும், சுற்றுலா பயணிகள் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியிலேயே அதிகம் குளிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

தென்காசியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் குற்றாலத்தில் சீசன் மே மாதத்திலேயே தொடங்கி விட்டது. கடந்த வாரத்தில் லேசான நீர்வரத்து குற்றாலத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது தென்காசி மற்றும் குற்றால சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கால் பழைய அருவி மெயின் அருவி ஆகியவற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் தண்ணீர் வருவதை அறிந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Courtallam, Heavy rain, Local News, Tenkasi