ஹோம் /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகளில் லிஸ்ட்

தென்காசி மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகளில் லிஸ்ட்

மின் தடை

மின் தடை

Tenkasi District | தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மின் கோட்டத்துக்கு உட்பட்ட மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி, துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

எனவே, அங்கிருந்து மின்வினியோகம் பெறும் மலையாங்குளம், சிதம்பரபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிக்குளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரங்கசமுத்திரம், ஆலமநாயக்கன்பட்டி, மகாதேவர்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சான்குளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல, நக்கலமுத்தன்பட்டி, கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Must Read :ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

இந்நிலையில், கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் ஜே.பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என்றும் இந்த பகுதிகளில் மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tenkasi