Union
Budget 2023

Highlights

ஹோம் /தென்காசி /

சங்கரன்கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தின் மத்தியில் நடராஜர் வீதி உலா..

சங்கரன்கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தின் மத்தியில் நடராஜர் வீதி உலா..

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்

Sankaranarayanar Temple : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரை பூஜை மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிவனின் வடிவமான நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரை பூஜை மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிவனின் வடிவமான நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. நடராஜர் தனது ஆனந்த நடனத்தின் மூலமே ஐந்தொழில்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை செய்கின்றார் என்று நம்பப்படுகிறது.

திருவாதிரை ஏழாம் திருநாளில் நடராஜர் சிவப்பு உடை அலங்காரங்கள் செய்து ருத்ரன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார். நடராஜருக்கு தீபாராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏழாம் திருநாள் அன்று இரவு வெள்ளை நிற உடைகள் மற்றும் அலங்காரங்கள் செய்து பிரம்மா அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து திருவாதிரை எட்டாம் திருநாளில் பச்சை உடை ஆலங்ரங்கள் செய்து விஷ்ணு அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாவித்தார். நடராஜருக்கு தீபாராதனைகள் செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi