ஹோம் /தென்காசி /

சங்கரன்கோவில் : ருத்ரன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய நடராஜர்..

சங்கரன்கோவில் : ருத்ரன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய நடராஜர்..

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்

Sankaranarayanar Temple | சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில் திருவாதிரை 7ம் திருநாளில் நடராஜர் சிவப்பு உடை அலங்காரங்கள் செய்து ருத்ரன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

நடராஜர் தனது ஆனந்த நடனத்தின் மூலமே ஐந்தொழில்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை செய்கிறார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரை பூஜை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அதன்படி திருவாதிரை 7ம் திருநாளில் நடராஜர் சிவப்பு உடை அலங்காரங்கள் செய்து ருத்ரன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார். நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து 7ம் நாள் இரவு வெள்ளை நிற உடைகள் மற்றும் அலங்காரங்கள் செய்து பிரம்மா அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து திருவாதிரை 8ம் திருநாளில் பச்சை உடை அலங்காரங்கள் செய்து விஷ்ணு அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடராஜருக்கு தீபாராதனைகள் செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Tenkasi