தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள புலி அருவி ஆனது, குற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருக்கிறது. புலி அருவி மற்ற அருவிகளை காட்டிலும் மிகவும் சிறியது.
இது குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது. இது மெயின் அருவிக்கும் பழைய குற்றாலத்துக்கும் இடையே அமைந்துள்ளது. அருவிகள் திரிகூடமலையில் இருந்து வருகிறது.
மேலும் இந்த மலையை கயிலாயத்திற்கு இணையானது என்றும் கூறுவர். அருவியில் இருந்து இறங்கும் தண்ணீர் கடைசியாக ஒரு ஏரியில் முடிவடைகிறது. அந்த ஏரி போன்ற அமைப்பே இதன் அழகை மேலும் கூட்டுகிறது. புலி அருவியில் இருந்து வரும் தண்ணீர் அருகில் உள்ள பகுதிகளுக்கு விவசாய பாசனத்திற்கு உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க : சபரிமலை சீசன்... குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..
புலி அருவி தனியாருக்கு சொந்தமான பகுதிகளுக்கு நடுவில் அமைந்து இருக்கிறது. தனியார் விடுதிகளை கடந்தே இந்த அருவிக்கு செல்ல முடியும்.
புலி அருவி பெயர் காரணம்?
காடு போன்ற அமைப்பில் சுற்றி மரங்கள் நிறைந்த வனப்பகுதிக்கு நடுவில் தான் இந்த அருவி அமைந்து இருக்கிறது. புலிகள் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்லும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்ப அப்பகுதியில் வன உயிரினங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற வாசகம் எழுதிய பலகைகளும் வைக்கப்பட்டு இருக்கும்.
புலிகள் நீர் அருந்தி செல்லும் என்பதால் புலி அருவி ஆயிற்று
புலி அருவி குற்றால பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருக்கிறது. புலி அருவி மற்ற அருவியை காட்டிலும் மிகவும் சிறியது. இது குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது.
இங்கு ஒரு சாஸ்தா கோயிலும், யாத்ரீகர்களுக்கான நீராட இடமும் உள்ளது. ஆனால் தற்போது அந்த இடங்கள் அணைத்து வெறிச்சோடி காணப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பலருவி, பழைய குற்றாலம் அளவிற்கு புலி அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இல்லை என்பதால் குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்கள் இருவரும் குளிப்பது பாதுகாப்பானதாக இருக்கிறது.
தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi