ஹோம் /தென்காசி /

குற்றாலத்தில் குழந்தைகளை அதிகம் கவரும் அருவி எது தெரியுமா?

குற்றாலத்தில் குழந்தைகளை அதிகம் கவரும் அருவி எது தெரியுமா?

X
குற்றாலம்

குற்றாலம்

Tenkasi District News : குழந்தைகளை அதிகம் கவரும் புலி அருவி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது. தற்போது தண்ணீர் இல்லாததால் அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்றல் தழுவும் தென்காசியில் ஒன்பது அருவிகளில் ஒன்று தான் இந்த புலி அருவி. பெயரை போலவே புலிகள் வசிக்கும் குகைக்குள் சென்று குளிக்கும் அனுபவத்தை கொடுக்கக்கூடியது.

பழைய அருவியை போல் பிரம்மிக்க வைக்கும் உயரம் பாறைகள் நடுவே விழும் தண்ணீர் போன்றவை இல்லை என்றாலும் ஏழு அடி உயரத்தில் மூன்று செயற்கையாக அமைத்த பிரிவுகள் வழியாக தண்ணீர் வழிந்தோடும்.

அதேபோல் ஒரு சிறிய நீச்சல் குளம் போன்ற அமைப்பு உள்ளதால் சிறுவர்கள் இதில் உற்சாகமாக விளையாடுவர். முன்னர் காலத்தில் இப்பகுதியில் புலிகள் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்லும் என்று சொல்லப்படுகிறது. புலிகள் நீர் அருந்தி செல்லும் என்பதால் புலி அருவி ஆயிற்று.

மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

ஒரு குழாயிலிருந்து வரும் நீர் போல சிறிதளவு தண்ணீர் தான் தற்போது இந்த அருவியில் வருகிறது. ஆனால் தற்போது பருவமழை காலம் இல்லை என்பதால் நீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi