ஹோம் /தென்காசி /

தென்காசி புலியருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்..

தென்காசி புலியருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்..

தண்ணீர் இன்றி காணப்படும் புலியருவி

தண்ணீர் இன்றி காணப்படும் புலியருவி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள புலி அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதால் அதில் குளித்து மகிழ வந்த பொதுமக்கள் ஏமாற்றம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்றல் தழுவும் தென்காசியில் ஒன்பது அருவிகளில் ஒன்று தான் இந்த புலி அருவி. பெயரை போலவே புலிகள் வசிக்கும் குகைக்குள் சென்று குளிக்கும் அனுபவத்தை கொடுக்கக்கூடியது.

  பழைய அருவியை போல் பிரம்மிக்க வைக்கும் உயரம் பாறைகள் நடுவே விழும் தண்ணீர் போன்றவை இல்லை என்றாலும் ஏழு அடி உயரத்தில் மூன்று செயற்கையாக அமைத்த பிரிவுகள் வழியாக தண்ணீர் வழிந்தோடும். அதேபோல் ஒரு சிறிய நீச்சல் குளம் போன்ற அமைப்பு உள்ளதால்  சிறுவர்கள் இதில் உற்சாகமாக விளையாடுவர்.

  அடர்ந்த மரங்களுக்கு நடுவில் அழகாக அமைந்துள்ள இந்த அருவியில் குளித்து குதூகலிக்க குழந்தைகளுக்கு எப்போதும் ஆசை தான். ஏனென்றால் மிதமான வேகத்தில் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாதவாறு தண்ணீர் கொட்டும், ஆனால் தற்போது அருவியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் மக்கள் கூட்டம் இன்றி அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. இதை அறியாமல் வந்த சில சுற்றுலா பயணிகளும்ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

  இதையும் படிங்க :  தென்காசியில் மலை மீது ஒரு சொர்க்கம்.. திருமலை முருகன் கோயிலுக்கு போயிருக்கீங்களா..?

  ஒரு குழாயிலிருந்து வரும் நீர் போல சிறிதளவு தண்ணீர் தான் தற்போது இந்த அருவியில் வருகிறது. இந்த பகுதியில் உள்ள மக்கள் குறைவாக விழும் தண்ணீரில் தற்போது துணிகளை துவைத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது ”தென்மேற்கு பருவமழையின் போது இந்த அருவியில் அழகாக தண்ணீர் வந்து விழும். மூச்சுதிணறல் ஏற்படாமல் குழந்தைகள் குளிக்கலாம். ஆனால் தற்போது பருவமழை காலம் இல்லை என்பதால் நீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்” என்று தெரிவித்தனர்.

  செய்தியாளர் : சுபா கோமதி ( தென்காசி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Falls, Local News, Tenkasi