தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள சங்கரநாராயணர் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
திருவாதிரை நட்சத்திரம் என்பதை சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என குறிப்பிடப்படுகிறது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் பௌர்ணமியில் ஆனந்த நடனத்தை ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதம் அதிகாலை பொழுதில் சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவது ஐதீகம். அதனால் தேவர்கள் தெய்வ தரிசனம் செய்யும் அதிகாலைப் பொழுதில் தெய்வ தரிசனம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. திருவாதிரை அன்று சங்கர நாராயணர் கோயில் உள்ள நடராஜருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஆருத்ரா தரிசனம் என்கிறோம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் அதிகாலையில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள சங்கரநாராயணர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு தீபாரணைகள் செய்யப்பட்டு சப்பரத்தில் நடராஜர் ஆனந்த நடன நிகழ்வு நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi