முகப்பு /தென்காசி /

சங்கரநாராயணன் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்.. சங்கரன்கோவிலில் குவிந்த மக்கள்!

சங்கரநாராயணன் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்.. சங்கரன்கோவிலில் குவிந்த மக்கள்!

X
சங்கரநாராயணன்

சங்கரநாராயணன் கோவிலில் தெப்ப உற்சவம்

Tenkasi News : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் திருக்கோவில் சுக்கிர பாண்டியன் மன்னனால் கட்டப்பட்ட கோவிலாகும். கி.பி. 1022ம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலில் அரியும், சிவனும் ஒரே சிலையில் பாதி. பாதியாக அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இது கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும், திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்துகிறது.

இந்த கோயிலில் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் தெப்பத்தில் அமைந்திருக்கும் தேரில் சங்கரநாராயணன் சமேத கோமதி அம்பாள் எழுந்தருள தெப்பம் கோவில் குளத்தை சுற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு நேரத்தில் தெப்பத்தில் ஒளிரும் வண்ண வண்ண விளக்குகள் மேலும் அந்த விளக்குகளை எதிரொளிக்கும் குளத்தின் நீர் என பார்ப்பதற்கே இந்த தெப்பத்திருவிழா மிகவும் அழகாக அமைந்திருந்தது.

First published:

Tags: Local News, Tenkasi