ஹோம் /தென்காசி /

தென்காசி அடவிநயினார் அணைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

தென்காசி அடவிநயினார் அணைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அழகாய் அமைந்துள்ள அடவிநயினார் அணை

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அழகாய் அமைந்துள்ள அடவிநயினார் அணை

தென்காசி மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணையில் குவியும் சுற்றுலா பயணிகள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மேக்கரை பகுதியில் அனுமன் நதிக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ளதுதான்அடவிநயினார் அணை. இந்த அணையில் கொள்ளளவு 132 அடியாக உள்ளது.

  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்த அணை 2002 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இந்த அணையை நம்பி சுமார் 10 கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் போது இந்த அணை நிரம்பும். அணை தன் முழு கொள்ளளவான 132 அடியை எட்டியதும் உபரி நீர் மதகுகள் வழியாக கால்வாய்களில் வெளியேற்றப்படும். அந்த அழகை காண்பதற்காகவும், குளிப்பதற்காகவும் குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் இந்த அணைக்கு வருகை தருவர்.

  இங்கு உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்வர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் இந்த அணையை பார்க்க சுற்றி பார்க்க கேரளாவில் இருந்தும் மக்கள் கூட்டம் படையெடுக்கும். இயற்கையின் மடியில் அழகாய் வீற்றிருக்கும் அணைக்கு நீங்களும் ஒரு விசிட் அடிங்க.

  செய்தியாளர்:  சுபகோமதி ( தென்காசி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Tenkasi, Tourism