எம்.பி.ஏ முடித்துவிட்டு அக்கவுண்டன்ட் ஆக எட்டு வருடங்கள் பணியாற்றிய பின்பு சொந்த ஊரில் தனக்கு பிடித்த தொழில் என ஒரு காபி ஷாப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சங்கரன்கோவில் இளைஞர்.
சொந்த ஊரில் டீக்கடைகள் அதிக அளவில் உள்ள நிலையில், இங்கு மக்களுக்கு என பிரத்யோகமாக காபி ஷாப் ஒன்றை தொடங்க வேண்டும் என்பதே இவரின் கனவாக மூன்று மாதத்திற்கு முன்பு இருந்தது. மூன்று மாதங்கள் கடந்து தனது கனவை நனவாக்கிய உள்ளார் இளைஞர் மருதுபாண்டி.
சங்கரன்கோயில் நீதிமன்றத்திற்கு அருகில் கல்மண்டபத்தில் அமைந்திருக்கும் அழகிய coffee கடை தான் Cafe square. இந்தப் பகுதியில் வெஜிடேரியன் மட்டும் செய்யும் உணவகங்கள் மிகவும் குறைவு. அதுவும் சாண்ட்விச், பிரைஸ் என்றாலே நான் வெஜ் கடைகளில் தான் அதிகம் கிடைக்கிறது. அதை மாற்றும் விதமாக சைவ விரும்பிகளுக்காகவே தனித்துவமாக அமைக்கப்பட்ட கடை தான் இது.
காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் இது இருக்கும். இங்கு கோல்ட் காபி, கோல்ட் எக்ஸ்பிரஸ்சோ, பில்டர் காபி போன்ற காபி வகைகள் தனித்துவமாக செய்யப்படுகிறது. என்னதான் தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும் தனக்கான பிசினஸ் ஒன்றை தொடங்க வேண்டும் என்பதே பேஷன் ஆக இருந்தது என்றும் அதனை தற்போது நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார் cafe square உரிமையாளர் மருதுபாண்டி.
மேலும் ஃபியூச்சரில் இந்த காஃபி ஸ்கொயரை மில்லட் ரெஸ்டாரண்டாக மாற்ற வேண்டும் என்பதே தன்னுடைய அடுத்த கனவாக இருக்கின்றது என்பதனையும் தெரிவித்தார். திணை வகைகளில் செய்யக்கூடிய அல்வா, பாயசம் போன்ற பொருட்களை தன்னுடைய மெனுவில் add செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் ரூ.55.70 கோடி மதிப்பீட்டில் 5 மருத்துவமனைகள் வர போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi