ஹோம் /தென்காசி /

காடை முட்டையில் “எக் ஸ்டிக்” ரெசிபி செய்து மக்களிடையே பிரபலமாகும் சங்கரன்கோவில் எம்.பி.ஏ பட்டதாரி

காடை முட்டையில் “எக் ஸ்டிக்” ரெசிபி செய்து மக்களிடையே பிரபலமாகும் சங்கரன்கோவில் எம்.பி.ஏ பட்டதாரி

X
Kadai

Kadai egg sticks 

Thenkasi Kadai egg sticks | தனியார் கம்பெனியில் HR ஆக வேலை பார்த்துக்கொண்டே பார்ட் டைம் ஆக காடை முட்டை தொழிலை ஆரம்பித்த பட்டதாரி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

சங்கரன்கோவிலில் காடை முட்டை ஸ்ட்ரீட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறர் எம்பிஏ பட்டதாரி ஒருவர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் அருகே தள்ளுவண்டி கடையில் காடை முட்டைகள் மூலம் செய்யப்படும்“எக் ஸ்டிக்” விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர்.. மனிதவள மேம்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்த இளைஞர்கௌதம்,அந்த வேலையைதுறந்துவிட்டு தற்போது முழுநேரமாகவே இந்த தள்ளுவண்டி கடை வியாபாரத்தை கவனித்து வருகிறார்.

குழி பணியார கடாயில் காடை முட்டையை உடைத்து ஊற்றி மாசாலா பொருட்கள் போட்டு ஒரு குச்சியையும் அதன் மீது வைத்து புதுமையான முறையில் ”எக் ஸ்டிக்” ரெசிபி செய்து விற்பனை செய்து வருகிறார் இவர்.

30 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த எக் ஸ்டிக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தனியார் கம்பெனியில் HR ஆக வேலை பார்த்துக்கொண்டே பார்ட் டைம் ஆக காடை முட்டை தொழிலை ஆரம்பித்தார். இரண்டு மாதத்திற்கு முன்னர் பணியை ராஜினாமா செய்து இந்த தொழிலையே முழு வேகத்துடன் செய்து வருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் செக்கு எண்ணெயில் காடை முட்டையை பொரித்து கொடுப்பதால் மக்கள் இதனை பெரிதும் விரும்புவதாகவும் சங்கரன்கோவில்சுற்றுவட்டாரத்தில் யாரும் இதுபோன்று ஒரு உணவைசெய்யவில்லை என்பதால் மக்கள் இதனை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினார்.

சங்கரன்கோவில் சுற்றுப்புற மக்கள்,கீதாலயா தியேட்டர் பக்கமாக மாலை நேரத்தில் சென்றால்இவருடைய கடையில் விற்பனைக்கு கிடைக்கும் ‘காடை எக் ஸ்டிக்’கை ஒரு முறை ருசித்து பார்க்கலாம்..

First published:

Tags: Local News, Tenkasi