ஹோம் /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் குறைதீர்ப்பாளர் - கலெக்டர் விடுத்துள்ள முக்கிய தகவல்

தென்காசி மாவட்டத்தில் குறைதீர்ப்பாளர் - கலெக்டர் விடுத்துள்ள முக்கிய தகவல்

தென்காசி கலெக்டர் ஆகாஷ்

தென்காசி கலெக்டர் ஆகாஷ்

Tenkasi District | தென்காசி மாவட்டத்தில் குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப் பட்டுள்ளதாகவும், அவரிடம் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப் பட்டுள்ளதாகவும், அவரிடம் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றும் கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப் பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விவரங்களையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்னார்.

அதில், தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27ஆவது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், குறைகளைத் தீர்ப்பதற்காக ரா.ஜெயக்குமார் என்பவர் தென்காசி மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண்: 8925811329 மற்றும் மின்னஞ்சல் முகவரி: ombudsmanpersontenkasi@gmail.com ஆகும்.

Must Read : தொன்மை கதைகள் நிரம்பிய தோரணமலை முருகன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tenkasi