தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதி மக்கள், நெசவுத் தொழிலையே தங்களது முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரம் குடும்பத்திற்கு மேல் நெசவு தொழிலையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பணம் மதிப்பிழப்பிற்கு பிறகு விசைத்தறி தொழில் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறிவுக்கு ஜிஎஸ்டி வரி போட்டதன் விளைவாக இந்த தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது
விசைத்தறி தொழிலாளர் மாணிக்கத்திடம் கேட்டபோது அவர் கூறியவர், நான் இருபது வருடமாக விசைத்தறியில் நெசவு செய்து வருகின்றேன். நூல் விலை கடுமையான ஏற்றத்தை சந்தித்துள்ளது. 1200 ரூபாய் இருந்த ஒரு நூல் கட்டின் விலை தற்போது 2500 முதல் 2600 வரை அதிகரித்து உள்ளது.
நூலின் விலை அதிகரித்துள்ளதால் விசைத்தறி உரிமையாளர்களால் நூலை வாங்கி தொழிலாளர்களுக்கு கொடுக்க இயலவில்லை. இதன் மூலமாக தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடிகின்றது. அத்தனை நாட்களுக்கு மட்டுமே நூல் அவர்களுக்கு கிடைக்கின்றது.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக நலிவடைந்து வரும் தொழில்களில் விசைத்தறியும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இலவசமாக 750 யூனிட் மின்சாரம் தமிழக அரசால் வழங்கப்படும். 750 யூனிட்டுக்கு மேல் வரும் மின்சாரத்தின் விலை அதிகரித்து உள்ளது அதனால் சிறு குறு தொழில் செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை அரசாங்கத்திற்கு முறையாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாக இருக்கிறது என்று விசைத்தறி தொழிலாளர் மாணிக்கம் தெரிவித்தார்.
ALSO READ | ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்.. மனைவி கண்டித்ததால் ரஜினி ரசிகரின் விபரீத முடிவு!
2022 மற்றும் 2023 ஆண்டிற்கான விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தில் 10% கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பதனை முடிவு செய்தோம். இந்த கூலி உயர்வுக்காக ஏலத் இடங்களில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது
தாசில்தார், கோட்டாட்சியர், டிஆர்ஓ, திருநெல்வேலி தொழிலாளர் இணை ஆணையர் ஒப்பந்தம் என பல கட்டமாக ஒப்பந்தம் செய்யப்பட்டும் இன்னும் 10 சதவீதம் கூலி உயர்வு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் கேட்டால், தாங்கள் தயார் செய்யும் சேலையின் ரகத்திற்கு தற்போது விற்பனை குறைவாக இருக்கின்றது என்றும், மின்சார விலை உயர்வாக உள்ளது என்றும் மேலும் ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை காரணமாக கூறி இந்த 10 சதவீதம் கூறி உயர்வை இன்னும் வழங்கவில்லை என்று மாணிக்கம் தெரிவித்தார்.
விசைத்தறி தொழிலாளர்கள் நல வாரியத்தில் கல்வி உதவித் தொகையாக சிறிய அளவிலான தொகையை மட்டுமே எங்களுக்கு உதவியாக கிடைக்கின்றது. மேலும் பிஎஃப் போன்ற எந்த சலுகையும் உங்களுக்கு கிடைக்கவில்லை. 60 வயதிற்கு மேல் பட்டோர் விசைத்தறி தொழில் செய்பவர்கள் ஆக இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதிய தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது ஆனால் அந்த தொகையும் 7 மாதத்திற்கு ஒரு முறை பெரும் 2000 ரூபாய் மட்டுமே எங்களுக்கு கிடைக்கின்றது என்று மாணிக்கம் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு 250 ரூபாய் இருந்து 275 ரூபாய் மட்டுமே எங்களுக்கு ஊதியமாக கிடைக்கின்றது. வாங்கும் கூலியும் பாதி தொகை செலவாகி விடுகிறது. தொழிலை செய்வதற்கு வங்கியில் கடன் வாங்கியதை கூட எங்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மட்டுமே தொழில் செய்யும் அளவிற்கு எங்களுக்கு நூல்கள் கொடுக்கப்படுகிறது, மற்ற நேரங்களில் வேலை இல்லாமல் இருக்கின்றோம் என்று விசைத்தறி தொழிலாளர் மாணிக்கம் தெரிவித்தார்.
ALSO READ | தென்காசிக்கு கப்பலில் வரும் தேக்கு மரங்கள்.. ஏன் தெரியுமா?
ஒரு சேலைக்கு 130 ரூபாய் மட்டுமே கூலியாக கிடைக்கின்றது அதிலும் சேலை பழுதாய் போனால் அதற்கான சேதம் போக மிக சிறிய அளவு தொகையை மிஞ்சும். 300 லிருந்து 400 ரூபாய் வரை விற்கும் காட்டன் சேலைகளை தற்போது நூலின் விலை ஏற்றத்தினால் பட்டு சேலை விலைக்கு நிகராக விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீட்டை விசைத்தறி தொழிலுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பருத்தி மற்றும் நூலில் அரசிற்கு போக மற்றதை விசைத்தறி நெசவாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் அதேபோல் நூல் வரியையும் குறைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi