தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகாந்தன். இவருக்கு கலை பொருட்களை சேகரிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து தான் சுற்றுலா செல்லும் ஊர்களில் கிடைக்கும் புவிசார் குறியீட்டு பொருட்கள் அனைத்தையும் வாங்கி விடுவார். தன் வீட்டையே அலங்கார பொருட்களால் நிரப்பி உள்ளார். எப்போது தொடங்கியது இந்த பழக்கம்? ஏன் இந்த சேகரிப்பில் உங்களுக்கு ஆர்வம் வந்தது என பதிலளிக்கிறார் சிவகாந்தன்.
”நான் எம்பிஏ படித்துள்ளேன். தற்போது பிசினஸ் செய்து வருகின்றேன். பயண நூல் எழுத்தாளர் அருணகிரியுடன் மன்னர்கள் வாழ்ந்த இடத்தை தேடி செல்வது வழக்கம். எங்களை சுற்றி உள்ள பகுதியில் வாழும் ஜமீன்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் வாழ்க்கை முறையை பற்றி தெரிந்து கொள்வோம் அப்படி தொடங்கியதுதான் இந்த பழங்காலத்து பொருட்களை சேமிப்பது.
புவிசார் குறியீடு இருக்கும் பொருட்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஆந்திராவில் இருக்கும் கொண்டப்பள்ளி ஊர் மரத்தினால் செய்யப்பட்டபொம்மைகளுக்கு மிகவும் பிரபலமானது. நான் அங்கு சென்ற போது விதவிதமான பல பொம்மைகளை வாங்கிவந்துசேமித்து வைத்துள்ளேன்.
மேலும் பத்தமடை பாய், மற்றும் பத்தமடை பாயினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் ஆகியவற்றையும் சேமித்து வைத்துள்ளேன். மரம் சார்ந்த பொருட்களில் ஆர்வம் அதிகம் .அதனால் என் வீட்டில் இருக்கும் நாற்காலிகள் வைரம் பாய்ந்த தேக்கு மரத்தால் செய்யப்பட்டது ஆகும். ரோஸ் உட் எனப்படும் விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட அழகுப் பொருட்களையும் சேமித்து வைத்துள்ளேன். ஒரே மரத்தால் செய்யப்பட்ட மீன் போன்ற வடிவத்தில் உள்ள அழகிய கலை பொருளையும் சேமித்து வைத்துள்ளேன்.
இதையும் படிங்க: சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!
இயந்திர வேலைப்பாடு இல்லாமல் கையினால் அழகாக செய்யப்பட்ட நேர்த்தியான மேஜைகள், ஜமீன் காலத்து சோபாக்கள் என பலவகை பழமையான கலைப்பொருட்கள் என் வீட்டில் இருக்கிறது பழைய காலத்தில் தலையணைகள் பாய்கள் ஆகியவற்றை வீட்டுக்கு மேல் புறத்தில் வைப்பது வழக்கம் அந்த கட்டைகளை எடுத்து வந்து வண்ணங்கள் பூசி அழகுக்காக மலர்களை எல்லாம் வைத்து வீட்டின் முன்புறத்தில் அழகுப்படுத்தி உள்ளேன் .
கலை மற்றும் புவிசார் பொருட்களை சேமிப்பதால் எனக்கு சுய ஒழுக்கம் அதிகரித்துள்ளது, அதேபோல் சேமித்த பொருட்களை துடைத்து வைப்பதன் மூலம் தனக்கு பொறுமை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர்: சுபா கோமதி ( தென்காசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Tenkasi