தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்காபுரத்தில் கிணறு தோண்டும் பணியின் போது சுற்று சுவர் கல் விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் முருகன் என்பவரது விவசாய தோட்டத்தில் கிணறு உள்ளது. இந்த கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த மஞ்சுநாதன், கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் வேலு ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தலைக்கவசம் , வலைகள் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் இந்த தொழிலாளர்கள்பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே 23 அன்றுமஞ்சுநாதன், மாரிமுத்து, வேலு மூவரும் கிணற்றில் இறங்கி சரளை கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் தொழிலாளி மஞ்சுநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே நேரத்தில் வேலு என்ற தொழிலாளிகாயங்களுடன் உயிர் தப்பினார். உடனடியாக வேலுமீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் உயிரிழந்த மஞ்சுநாதனின் உடலை சின்ன கோயிலான்குளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மஞ்சுநாதன் மனைவி சரண்யா( 22) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் சின்னக் கோவிலான்குளம் போலீசார் வென்றிலிங்காபுரத்தைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் முருகன், வீரசிகாமணியை சேர்ந்த ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்புகளை தடுக்க கோரிக்கை:
சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வட மாவட்டங்களில் இருந்து கிணறு வெட்டும் பணிக்காக ஒவ்வொரு குழுவினராக வந்து இங்கு தங்கி அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிணறு ஆழப்படுத்தும் பணி உள்ளதா என கேட்டு அதை செய்து வருகின்றனர். அவர்களாகவே சென்று வேலை கேட்கும் பொழுது வேலை கொடுப்பவர்கள் எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் வேலை வழங்குவதாக கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை முறைப்படுத்தி கிணறு ஆழப்படுத்தும் வேலைக்கான பணிகளை செய்யும் பொழுது முறையான அனுமதி மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா என கவனித்து அதன் பின் அனுமதி வழங்கினால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death, Local News, Tenkasi