முகப்பு /தென்காசி /

காவலர் தேர்வில் முதலிடம் பிடித்த விசைத்தறி தொழிலாளி மகள்.. பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!

காவலர் தேர்வில் முதலிடம் பிடித்த விசைத்தறி தொழிலாளி மகள்.. பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!

காவலர் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி

காவலர் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி

Tenkasi News | தென்காசியில் காவலர் தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சங்கரன்கோவில் மாணவிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம்கரிவலம்வந்தநல்லூர் ஆல் வின்னர் அகாடமியில் படித்து காவலர் தேர்வில் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் மகள் கலா (23) தமிழக அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற பெற்றார் அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் மகளான கலா(23) கரிவலம்வந்தநல்லூரில் உள்ள ஆல்வின்னர் அகாடமியில் எட்டு மாதங்களாக படித்து கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தகுதிக்கான எழுத்து, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் பங்குபெற்ற கலா மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதனைதொடந்து கடந்த வாரம் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலாவை நேரில் அழைத்து தமிழக காவல்துறைத்தலைவர் சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் இறையன்பு ஆகியோர் முன்னிலையில் காவலர் பணிக்கான பணி ஆணையை வழங்கினார்.

முதலிடம் பெற்று முதல்வரிடம் பணி ஆணை பெற்ற மாணவி கலாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆல்வின்னர் அகாடமியில் பயின்று மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற கலாவிற்கு சங்கரன்கோவில் தாலுகா இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் மரக்கன்றுகள் வழங்கிவாழ்த்து தெரிவித்தனர்.

இதில் ஆல்வின்னர் அகாடமி ஜான்சன் மற்றும் பெற்றோர்கள், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Police, Tenkasi